Home History திருவெள்ளறை ஸ்வஸ்திகா கிணறு

திருவெள்ளறை ஸ்வஸ்திகா கிணறு

by Dr.K.Subashini
0 comment

செய்தி, விழியப் பதிவு, புகைப்படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி


 

வணக்கம்.

இன்று ஒரு வித்தியாசமான விழியப் பதிவு தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.
இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் செய்யப்பட்டது.
​திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயில் திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இருப்பது. ​பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மன் நிர்மாணித்த கோயிலாக இது அறியப்படுகின்றது.
இக்கோயிலின் பின்புற சுவற்றினைக் கடந்து​ புதர் நிறைந்த பாதையில் நாம் நடந்து சென்றோம் என்றால் சற்றே தூரத்தில் தமிழக தொல்லியல் துறையின் பாதுகாப்பில் அமைந்திருக்கும் ஸ்வஸ்திகா வடிவ கிணற்றினை வந்தடைவோம்.
ஸ்வஸ்திகா வடிவில் நான்கு மூலைகளைக் கொண்டதாக இந்தக் கிணறு அமைந்திருக்கின்றது. நான்கு புறங்களிலும் கீழிறங்க படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில் இருப்பவரை இன்னொரு பக்கத்தில் இருப்பவர் காணமுடியாதவாறு அற்புதமாக இந்தக் கிணறு அமைக்கப்பட்டிருக்கின்றது.
கிணற்றின் மேல் பரப்பில் சுற்றிலும் கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கின்றன. அதன் மேல் ஆங்காங்கே நந்தி, நாகர் போன்ற சிற்பங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கிணறு கி.பி. 800ம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்தி வர்மன் ஆட்சிகாலத்தில் கம்பன் அரையன் என்பவரால் உருவாக்கப்பட்ட கிணறு என்று தகவல் குறிப்பு சொல்கின்றது. தந்திவர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றான மறிபீடுகுப்பெருங்கிணறு என அறியப்பட்ட விஷயமும் இக்கிணற்றில் சுற்றிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களின் வழி அறிய முடிகின்றது.
இந்த விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/03/2014.html
 
யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=lLMmVIKrRMI
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

 ஸ்வஸ்திகா கிணறு – முன் பக்கம்
தமிழக தொல்லியல் துறையின் தகவல்
 ஒரு பகுதியில்  விநாயகர், நாகர் சிலைகள் அமைந்திருக்கின்றன
 கிணற்றின் படிகள்
 கிணற்றின் அடிப்பகுதி
 ஸ்வஸ்திகா கிண்று மேலிருந்து
 சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்
  சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்
  சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்
  சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்
  சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்
  சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்
  சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்
  சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்
 கிணற்றின் உள்ளே பார்வையாளர்கள்
 வெளிப்புறத்தில் ஒரு மூலையிலிருந்து
 தனித்தனியாக வெளியே இருக்கும் சிற்பங்கள்
 என்னுடன் பயணத்தில் இணைந்து கொண்ட மத்திய தொல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பரந்தாமன்
 மேலும் சில சிற்பங்கள்
 நந்தி
 சுபா
 கிணற்றின் மேலும் ஒரு பகுதி
  சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்
 சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள்
 சுவற்றின் ஓரத்தில் தெரியும் கல்வெட்டுக்கள் , சிற்பங்கள்

You may also like

Leave a Comment