Home Chola தாராசுரம்

தாராசுரம்

by Dr.K.Subashini
0 comment

 

தாராசுரம் 

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி விளக்கும் ஒரு விழியப் பதிவு இது. சோழர் காலத்து கட்டிடக் கலையின் சிறப்பினை வெளிக்காட்டும் இந்த அற்புதப் படைப்பின் வரலாற்றினை அதன் சிறப்பினை இக்கோயிலின் பகுதிகளை விளக்கும் சிறப்புப் பதிவு இது. விளக்குபவர் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதி.

 

சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.

தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது. இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவரும் தமிழ் நாடு தொல்லியல் துறையில் பல்லாண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றவருமான டாக்டர்.பத்மாவதி அவர்கள் தாராசுரம் எனும் இந்த கோயிலைப் பற்றியதோர் விரிவான விளக்கம் அளிக்கின்றார்.
இவரது பேட்டியிலிருந்து சில குறிப்புக்கள்.
  • ராஜராஜன் எனும் இந்த மன்னன் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அவன்  அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து தனது 2 குழந்தைகளை இங்கே வளர்த்து வருகின்றான்.
  • இந்த ஊருக்குப் பெயர்ந்த  2ம் ராஜராஜன் தான் இந்த தாராசுரம் கோயிலைக் கட்டிய சோழ மன்னர்.
  • மூவருலா எனப்படுவது விக்கிரம சோழன், 2ம் குலோத்துங்கன்,  2ம் ராஜராஜசோழன் ஆகிய மூவருடைய  புகழைப் பாடுவதாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் ஒட்டக்கூத்தர்.
  • கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம்.
  • முதன் முதலில் ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது.
  • தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.
  • 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் தான் ராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ர தகவல் முதன் முதலாக அறியப்பட்டது.

 

 

விழியம் பதிவும் தயாரிப்பும்: முனைவர்.க.சுபாஷிணி

பதிவு செய்யப்பட்ட நாள்: 02.மார்ச் 2011

 

 

{flvremote}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/DrPathma/dharasuram.flv{/flvremote}


இந்தப் பதிவை மேற்கொள்ளச் சென்ற குழுவில் என்னுடனும் டாக்டர் பத்மாவதி அவர்களுடனும்  இணைந்து கொண்டவர்கள்  திரு.செல்வமுரளியும் திரு.உதயனும். இக்குழுவினரின் சில படங்கள் இங்கே!

செல்வமுரளி, டாக்டர் பத்மாவதி, உதயன்

 

முனைவர்.க.சுபாஷிணி

உதயன், டாக்டர் பத்மாவதி, செல்வமுரளி

டாக்டர். பத்மாவதியுடன் உதயன்

டாக்டர். பத்மாவதி

முனைவர்.க.சுபாஷிணி

படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி, உதயன்

 

You may also like

Leave a Comment