Home History தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்

by Dr.K.Subashini
0 comment

ஒலிப்பதிவும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி
ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாள்: 28-06-2010

 

 

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்

 

தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டிகள்  இப்பகுதியில் இடம் பெறுகின்றன.

 

 

முனைவர் பத்மாவதி

 

 

பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/pathma1.mp3{/play}

அறிமுகம் – இப்பகுதியில் தனது தற்போதைய பணிகள் பற்றி விளக்குகின்றார். அத்துடன் தான் தற்போது பிரத்தியேகமாக மேற்கொண்டுள்ள களப்பிரர் வரலாறு பற்றிய நூல் பணிகள் பற்றிய சிறு விளக்கமும் வருகின்றது. 1940ல் முதலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடு கிபி.8ம் நூற்றாண்டின் முற்பகுதியைக் களப்பரர் அரச வம்சம் ஆண்ட செய்திகள் பின்னர் அது பற்றி தொடரப்பட்ட ஆய்வுகள் தனது தற்போதைய பணிகள் என்று செல்கின்றது இப்பகுதி.

 

 

பாகம் 2 : {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/pathma2.mp3{/play}

 

பணியில் சேர்ந்த பொழுது முதலில் இவருக்கு ஆய்வுக்கு வழங்கப்பட்ட ஊர் தஞ்சை. இங்கு தான் மேற்கொண்ட பணியைப் பற்றி விளக்குகின்றார். குழுவாக பணியை எப்படி ஆய்வாளர்கள் மேற்கொள்வர் என்று விளக்குகின்றார். கல்வெட்டுக்கள் ஆய்வுகள் செய்யும் வழிமுறைகள், எழுத்துக்களைக் கண்டு பிடிக்கும் முறை, எழுத்துக்களை கையாளும் முறை. என சரளமாக தனது அனுபவங்களை வழங்குகின்றார்.

 

 

பாகம் 3 : {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/pathma3.mp3{/play}

 

எவ்வாறு கல்வெட்டுக்களை ஆய்வு செய்வது என்ற தனது பேச்சினை தொடர்கின்றார்.  பல்லவர்கள், பாண்டியவர்கள் கட்டிய கோவில்களின் கட்டுமானம் எவ்வாறு வித்தியாசப்படுகின்றது என்று விளக்கமும் வருகின்றது இப்பதிவில். நிறைய கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கும் போது எல்லாவற்றையும் ஒரேவரிசையில் படித்து விட முடியாது. மாறாக ஒவ்வொன்றாகப் படியெடுத்து பின்னர் அவை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு அவையனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்று தமது ஆய்வுப் பணிகள் பற்றி குறிப்பிடுகின்றார் இப்பகுதியில்.

தஞ்சாவூர் தவிர்த்து செங்கல்பட்டு, வட ஆற்காடு பகுதிகளில் இவரது பணிகள் தொடர்ந்திருக்கின்றன.
பொது மக்கள் கூட சில வேளைகளில் அவர்கள் ஊரிலுள்ள கல்வெட்டுக்களை வாசித்து படியெடுக்க இந்த ஆய்வாளர்களைக் கேட்டுகொள்வார்களாம். பொது மக்களின் ஈடுபாட்டைப் பற்றி மகிழ்ச்சியுடன் விவரிக்கின்றார் இப்பகுதியில்.

 

நன்னிலம் வட்டக் கல்வெட்டுக்கள் என்ற மூன்று தொகுதிகளை முழுதாக தொகுத்து வெளியிட்டிருக்கின்றார்.  அதனைப் பற்றிய குறிப்பும் இப்பகுதியில் வருகின்றது.
 

பாகம் 4 : {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/pathma4.mp3{/play}

திருவெள்ளிமழலை என்னும் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு ராஜராஜனின் கல்வெட்டுக்கள் மட்டுமே 108 கல்வெட்டுக்களுக்கும் மேல் உள்ளன என்று குறிப்பிடுகின்றார்.

கும்பகோணம் கல்வெட்டுக்கள்,  பாபனாசம் கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகள் இப்பகுதியில் குறிப்பிடப்படுகின்றன.

பொது மக்களே இவர்களை அன்புடன் உபசரித்து இவர்களை வரவேற்பார்களாம். சைக்கிளில் செல்லும் இவர்களைப் பார்த்து முதலில் சர்க்கஸ் போட வந்தார்களா  என்று கேட்பார்களாம். பின்னர் உண்மை விஷயம் அறிந்து கொண்ட பின்னர் பொது மக்களும் இவர்களை அன்புடன் உபசரித்து தாங்களும் இவர்களுக்கு ஏதாவது உதவ முடிந்த வகையில்  உதவுவார்களாம்.  இவ்வகை சுவாரசியமான செய்திகளை இப்பகுதியில் பகிர்ந்து கொள்கின்றார்.

 

 

பாகம் 5 : {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/pathma5.mp3{/play}

முன்னர் இவர்கள் காலத்தில் கல்வெட்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட விதத்திற்கும் தற்போது எவ்வாறு இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன என்றும் இந்தப் பகுதியில் குறிப்பிடுகின்றார். முன்னர் இந்த  ஆய்வாளர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்வுகள் நிகழ்த்தியிருக்கின்றனர். தற்சமயம் அந்த அளவிற்கான் ஆர்வம் குறைந்திருப்பதாகவே இவர் தெரிவிக்கின்றார்.

 

கல்வெட்டு பயிற்சி நிறுவனத்தின் செயல்பாடுகள்.
தொல்லியல் துறை அறிஞர்.டாக்டர்.இரா.நாகசாமி இவரது வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். தமிழ் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபடுவது மேலும் சிறப்பாக இருக்கும் என்பதன் அடிப்படையில் அவர்களுக்குத் தொல்லியல் ஆய்வுத் துறையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்

தமிழிலக்கியத்துக்கும் கல்வெட்டுக்களுக்கும் தொல்லியல் ஆய்விற்கும் நல்ல தொடர்புபுள்ளது என்றும் .
கருவூர், மதுரை, பூம்புகார், தஞ்சை போன்ற இடங்கள் இலக்கிய பிரசித்தி பெற்றதனாலும் இங்கு பெரும்பாலும் ஆய்வுகள் தொடரப்படுவதற்கு காரணமாக் அமைகின்றன என்றும் இப்பகுதியில் நம்முடன் தகவல் பகிர்ந்து கொள்கின்றார்.

 

 

பாகம் 6 : {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/pathma6.mp3{/play}

 

பயிற்சிகளின் போது எப்படி கல்வெட்டுக்களை வாசிப்பது, எந்த சிலைகள் எந்த தெய்வங்களின் வடிவங்கள் என சிலைகளைப் பார்த்து கண்டுபிடிப்பது போன்ற விஷயங்களை எப்படித் தெரிந்து கொள்வது போன்ற சில தகவல்கள் இப்பகுதியில் வழங்கப்படுகின்றன. இவர்களின் ஆய்வுக் குழுவினருக்கு ஈconography  எனப்படும் ஆய்வு முறையை அறிந்து கொள்வதற்கு டாக்டர்.நாகசாமி வழங்கிய பயிற்சிகள் உதவியிருக்கின்றன.

தேவநாகரி, வட்டெழுத்து, கிரந்தம் இவை அனைத்திலும் தீவிர பயிற்சி இவர்களுக்கு கிடைத்திருந்ததால் கல்வெட்டுக்களைப் பார்த்ததுமே கண்டுபிடிக்கும் திறன் வாய்க்கப்பெற்றிருக்கின்றனர்.
ஒரு கோயிலைப் பார்க்கும் போதே அதில் உள்ள விக்கிரகங்கள் கல்வெட்டுக்கள் ஆகியவை இந்த கோயிலை சார்ந்தவைதானா என்பதை உடனே அறிந்து கொள்ளும் திறனும் அனுபவத்தின் மூலம் கிடைத்திருக்கீன்றது.
ஒரு கோயிலின் கட்டிட அமைப்பு எப்படி அமைந்திருக்கும் என்ற விளக்கமும் இப்பகுதியில் வழங்கப்படுகின்றது. இந்த ஒலிப்பதிவின் நேரம் ஏறக்குறைய 8 நிமிடம்.

 

பாகம் 7 : {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/pathma7.mp3{/play}

 

ஆதித்த சோழன், பராந்தக சோழன் போன்ற மாமன்னர்களின் கட்டிடக் கலை சிலை அமைப்புக்கள் போன்றவற்றை நேரடியாக பார்த்து எவ்வாறு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்கள் பாடம் நடத்துவார் என்று இப்பகுதியில் விளக்குகின்றார்.
சோழர் காலத்து  சிலைகளுக்கும், நாயக்கர் கால சிலைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை எப்படி கண்டு பிடிப்பது என்று  விளக்குகின்றார்.
தனது ஆய்வுப் பணிகளின் ஆரம்ப காலகட்டங்களில் எளிமையான வடிவங்களான ஸ்ப்த கண்ணிகளை அடையாளம் காண்பதை அறிந்து கொள்வதில் ஏற்பட்ட சிரமத்தையும் பின்னர் மிக எளிமையாக எல்லாவிதமான கலை வடிவங்களின் வேறுபாடுகளை தெரிந்து கொண்ட விதத்தையும் கூட விளக்குகின்றார். இந்த ஒலிப்பதிவின் நேரம் ஏறக்குறைய 8 நிமிடம்.

 

தொடரும்..

 

 

You may also like

Leave a Comment