Home Tamilmanigal டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

by Dr.K.Subashini
0 comment

"தேசிய சங்​க​நா​தம்" டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

பெ.சு.மணி


 

 

"தென்​னாட்​டுத் தில​க​ரா​க"ப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934இல் "தேசிய சங்​க​நா​தம்" எனும் தலைப்​பில் 32 பக்​கங்​க​ளில் டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு​வின் வாழ்க்கை வர​லாற்றை எழு​தி​னார்.​

 

இந்​தச் சிறு​வெ​ளி​யீட்​டில் டாக்​டர் நாயு​டு​வின் தேசி​யத் தொண்​டு​கள் 1933 வரை​யில் நிகழ்ந்​தவை மிகச்
சுருக்​க​மா​கக் கூறப்​பட்​டுள்​ளன.​ ​"டாக்​டர்" எனும் பட்​டப் பெயர்,​​ அவர் சித்த வைத்​தி​யம்,​​ ஆயுர்​வேத வைத்​தி​யம் இரண்​டி​லும் தேர்ச்சி பெற்று மருத்​து​வத் தொழி​லில்  பெரும்​பு​கழ் பெற்​ற​தால் அமைந்​தது.​ ​

 

சே​லம் மாவட்​டம் இராசி​பு​ரத்​தில் 1887ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி வர​த​ரா​ஜுலு நாயுடு பிறந்​தார்.​ தந்தை பெயர் பெரு​மாள் நாயுடு, தாயார் பெயர் குப்​பம்​மாள் உயர் ​நி​லைக் கல்வி கற்​கும்​பொ​ழுதே நாடெங்​கும் பர​விய வந்​தே​மா​த​ரம் இயக்​கம் இவ​ரைக் கவர்ந்​தது.​ இளை​ஞ​ரான  வர​தரா​ஜுலு  "முற்​போக்​கா​ளர் சங்​கம்" எனும் ஓர் அமைப்பை மாண​வர்​க​ளி​டையே அமைத்​தார்.​

 

அன்​னி​யத் துணி விலக்கு,​​ சுதே​சி​யம் எனும் தேசிய இலட்​சி​யங்​களை முழங்​கி​ய​தால் பள்​ளி​யில் இருந்து விலக வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டது.​ ​பத்தொன்​பது வய​தி​லேயே தேசிய அர​சிய​லில் ஈடு​பட்​ட​தைப் பற்றி பிற்​கா​லத்​தில் 1936 செப்​டம்​பர் 26ஆம்  தேதி​யிட்ட தமது தமிழ்​நாடு இத​ழின் தலை​யங்​கத்​தில் பின் வரு​மாறு கூறி​யுள்​ளார்:​-

"1906ஆம் ஆண்​டில் எனது 19 வய​தில் இந்​திய தேசிய இயக்​கத்​தில் நான் ஈடு​பட்​டேன்.​ 1908ஆம் வரு​ஷம் புதுச்​சே​ரிக்​குச் சென்று,​​ சுப்​பி​ர​ம​ணிய பார​தி​யா​ரின் ஆசீர்​வா​தத்​தைப் பெற்​றேன்.

 

"1916இல் தேசிய அர​சிய​லில் தீவி​ர​மா​கப் பங்​கேற்​றார்.​ இந்த வர​லாற்​றுச் சிறப்​பை, "தமிழ்த்​தென்​றல்" திரு.வி.க.​ தமது வாழ்க்​கைக் குறிப்​பு​க​ளில் பின்​வ​ரு​மாறு  குறிப்​பிட்​டுள்​ளார்:​-

"பால்- ​பால்-​லால் என்று பார​த​நாடு முழங்​கிய கால​முண்டு.​ நாயக்​கர்,​​ நாயுடு,​​ முத​லி​யார் என்று தமிழ்​நாடு முழங்​கிய கால​முண்டுமேலே,

  • "பால்" என்​பது பால​கங்​கா​தர தில​க​ரை​யும்
  • "பால்" என்​பது விபின் சந்​திர பாலை​யும்
  • "லால்" என்​பது லாலா லஜ​ப​தி​ரா​யை​யும்

குறிப்​பி​டு​வ​ன​வா​கும்.​

 

இவ்​வாறே,​​

  • நாயக்​கர் என்​பது,​​ ஈ.வெ.இராம​சாமி நாயக்​க​ரை​யும்
  • நாயுடு என்​பது​​ டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு​வை​யும்
  • முத​லி​யார் என்​பது திரு.வி.கல்​யா​ண​சுந்​தர முத​லி​யா​ரை​யும்

குறிப்​பி​டு​வ​ன​வா​கும்.​

 

முதல் சிறை​வா​சம்,​​ 1918இல் மதுரை ஹார்வி மில் தொழி​லா​ளர் வேலை நிறுத்​தத்தை ஊக்​கு​வித்து ஆற்​றிய பேச்​சுக்​காக விதிக்​கப்​பட்​டது.​சொற்​பொ​ழி​வில் அரசு நிந்​த​னைக்​கு​ரிய குற்​றம் இருப்​ப​தா​கக் குறிப்​பி​டப்​பட்டு,​​ பதி​னெட்டு மாத கடுங்​கா​வல் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.​ விசா​ர​ணை​யில்,​​ நாயு​டு​வின் சார்​பில் சேலம் சி.இரா​ஜ​கோ​பாலா​ச்​சாரி வாதா​டி​னார்.​

இவ​ருக்​குத் துணை​யாக,

  • சேலம் ஆதி நாரா​யண செட்​டி​யார்
  • மதுரை ஜார்ஜ் ஜோசப்
  • எம்.கே.சுந்​த​ர​ராஜ ஐயங்​கார்
  • ஆர்.எஸ்.​ வர​த​ரா​ஜுலு நாயுடு

ஆகிய வழக்​க​றி​ஞர்​கள் உத​வி​னர்.​

 

உயர் நீதி​மன்ற மேல் முறை​யீட்​டில் இராஜாஜி எழுப்​பிய சட்ட நுணுக்​க​வா​தத்​தால்,​​ நாயுடு விடு​தலை பெற்​றார்.​அ​வர் சேலத்​தில் வாரப் பதிப்​பாக 1919ஆம் ஆண்​டின் இறு​தி​யில் ஆரம்​பித்த "தமிழ் நாடு" இத​ழும் அவர் எழு​திய இரு கட்​டு​ரை​கள்,​​  இராஜ​து​ரோ​க​மா​னவை என்று குற்​றம் சாட்​டப்​பட்டு விதிக்​கப்​பட்ட ஒன்​பது மாதக் கடுங்​கா​வல் தண்​ட​னை​யால் இரண்​டாம் சிறை வாசத்தை ஏற்​றார்.​

 

1923இல் பெரி​ய​கு​ளம் தாலுக்கா மாநாட்​டில் தடை உத்​த​ரவை மீறிப் பேசி​ய​தற்​காக ஆறு​மா​தம் கடுங்​கா​வல் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.​ இது மூன்​றா​வது சிறைத்​தண்​ட​னை​யா​கும்.​ 24ஆம் வய​தில் அவர் ருக்​மணி எனும் பெண்​ம​ணியை திரு​ம​ணம் செய்​து​கொண்​டார்.​ ​1920 ஆகஸ்​டில் காந்​தி​ய​டி​கள் திருப்​பூர் வந்​த​பொ​ழுது,​​ டாக்​டர் வர​த​ரா​ஜுலு நாயுடு வீட்​டில் தங்​கி​னார்.​ 1921இல் மீண்​டும் சேலம் வந்​த​பொ​ழுது டாக்​டர் வர​த​ரா​ஜுலு நாயுடு வீட்​டில் தங்​கி​னார்.​  காந்​தி​ய​டி​கள் அப்​பொ​ழுது நடை​பெற்ற மக​ளிர் கூட்​ட​மொன்​றில் நாயு​டு​வின் மனைவி ருக்​மணி,​​  தாம் அணிந்​தி​ருந்த நகை​கள் அனைத்​தை​யும்,​​ காந்​தி​ய​டி​க​ளி​டம் கொடுத்​து​விட்​டார்.​

 

1922இல் காந்​தி​ய​டி​கள் சிறைப்​ப​டுத்​தப்​பட்​ட​பொ​ழுது,​​ அதற்கு எதிர்ப்​புத் தெரி​விக்க புது​மை​யைக் கையாண்​டார்,​​ டாக்​டர் நாயுடு.​ அர​சாங்​கத்​துக்​கு​ரிய  வரு​மான வரி​யைக் கட்ட மறுத்​தார்.​ காந்​தி​ய​டி​கள் விடு​தலை செய்​யப்​பட்ட பிற​கு​ தான் வரி​கட்ட முடி​யும் என அறி​வித்​துப் புது​மையை  நிகழ்த்​தி​னார்.​

 

வரி மறுப்​பைக் குறிப்​பிட்டு டாக்​டர் நாயுடு அர​சாங்​கத்​திற்கு எழு​திய கடி​தம்,​​ காந்​தி​ய​டி​க​ளின் "யங் இந்​தியா"வில் வெளி​வந்​தது.​ 1925இல் தமிழ்​நாடு மாகாண காங்​கி​ரஸ் கமிட்​டி​யில் தலை​வ​ரா​க​வும் பணி​யாற்​றி​னார்.​ 1929இல்  காங்​கி​ர​ஸோடு கருத்து வேற்​றுமை கொண்டு காங்​கி​ரஸை விட்டு வெளி​யே​றி​னார்.​ பின்​னர் ஆர்ய சமா​ஜத்​தில் இணைந்​தார்.​

 

"ஜஸ்​டிஸ்" கட்​சியை எதிர்த்​த​தில் டாக்​டர் நாயு​டு​வின் பங்​க​ளிப்​பைப் பின்​வ​ரு​மாறு திரு.வி.க.​ பாராட்​டி​யுள்​ளார்.​

 

"ஜஸ்டிஸ் கட்சி முளை​விட்​ட​போது,​​ அதைக் கிள்​ளி​யெ​றி​வ​தற்​கென்று புறப்​பட்​ட​வர் டாக்​டர் வர​த​ரா​ஜுலு.​  வர​த​ரா​ஜு​லு​வின் பிர​சா​ரம் தமிழ்​நாட்​டில் நாலா பக்​க​மும் பர​வா​வி​டின் "ஜஸ்​டிஸ்" கொடி நாடு முழு​வ​தும்  பர​வி, காங்​கி​ரஸ் உணர்ச்​சிக்​கேடு சூழ்ந்​தி​ருக்​கும்.​ தென்​னாட்​டில் காங்​கி​ரஸ் பக்​தியை வளர்த்த பெருமை  நாயு​டு​வுக்கு உண்டு" என்று திரு.வி.க.​ எழு​தி​யுள்​ளார்.

ஜி.சுப்​பி​ர​மணிய ஐயர்,​​ பார​தி​யார்,​​ திரு.வி.க.வைத் தொடர்ந்து,​​ தேசி​யத் தமிழ் இத​ழி​யல் துறையை மேலும் வளர்த்​த​வர்
டாக்​டர் நாயுடு.​

 

இவ​ரு​டைய இத​ழி​யல் பணி,​​ "பிர​பஞ்ச மித்​தி​ரன்" எனும் வார இதழ் மூலம் தொடங்​கி​யது.​ மங்​க​லம் ஷண்​முக முத​லி​யார் உரி​மை​யா​ள​ரா​க​வும்,​​ சுப்​பி​ர​ம​ணிய சிவா ஆசி​ரி​ய​ரா​க​வும் நடத்​தப்​பட்ட  "பிர​பஞ்சமித்​தி​ரன்" மிகுந்த பொருள் இழப்​பில் தத்​த​ளித்​த​பொ​ழுது,​​ டாக்​டர் நாயுடு 1916இல் அந்த இதழை  வாங்​கி​னார்.​ அவர் ஆசி​ரி​ய​ரா​னார்.​ இரண்​டாண்​டு​கள் வெளி​வந்​தது.​1918ஆம் ஆண்டு டாக்​டர் நாயுடு  சிறைப்​பட்​ட​பொ​ழுது,​​ ஆயி​ரம் ரூபாய் ஈடு​கா​ணம் அர​சால் கேட்​கப்​பட்டு,​​ பத்​தி​ரிகை முடக்​கப்​பட்​டது.​பி​ர​பஞ்சமித்​தி​ர​னுக்​குப் பிறகு தமிழ்​நாடு இத​ழைத் தொடங்கி ஆசி​ரி​ய​ராக இருந்து ஆற்​றிய நாயு​டு​வின்
பணி ஒரு வர​லாற்​றுச் சாத​னை​யா​கும்.​

 

அவ​ருக்கு இவ்​வ​கை​யில் பெரி​தும் துணை நின்​ற​வர் "பேனா மன்​னன்" என்று பிற்​கா​லத்​தில் புக​ழப்​பட்ட டி.எஸ்.சொக்க​லிங்​கம் ஆவார்.​

 

1919இன் இறு​தி​யில் சேலத்​தில் வாரப் பதிப்​பாக வெளி​வ​ரத் தொடங்​கிய தமிழ்​நாடு இத​ழில்,​​ 21 வய​தான இளை​ஞர் டி.எஸ்.சொக்க​லிங்​கம் 1923இல் துணை ஆசி​ரி​ய​ரா​னார்.​1926 ஏப்​ரல் 14இல் வாரப் பதிப்​பு​டன் நாளி​த​ழை​யும் தொடங்​கி​னார்.​ பா​ர​தி​யார் பாடல்​க​ளைச் சித்​திர விளக்​கங்​க​ளாக வெளி​யிட்ட முதல் இதழ் தமிழ்​நாடு எனும் பெருமை பெற்​றது.​"காலஞ்சென்ற ஜி.சுப்​பி​ர​ம​ணிய ஐ​ய​ரைப் போல டாக்​டர் நாயு​டு​வும் பத்​தி​ரிகை உல​கில் ஒரு தனிச் சுட​ராக விளங்​கி​னார்.​ தேசிய ஆதர்​சங்​க​ளு​டன் வெற்​றி​க​ர​மாக ஒரு தேச பாஷை பத்​தி​ரிகை நடத்​திய வீரர்​க​ளில் டாக்​டர் நாயு​டு​வைக் காலஞ்​சென்ற ஜி.சுப்​பி​ர​ம​ணிய ஐ​ய​ருக்கு இணை​யா​கச் சொல்​ல​லாம்" என்று வ.உ.சி.​ "தேசிய சங்க நாதம்" எனும் வெளி​யீட்​டில் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளார்.​

 

"இந்​தி​யன் எக்ஸ்​பி​ரஸ்" இத​ழும் டாக்​டர் நாயு​டு​வின் முயற்​சியே.​ 1916லேயே ஆங்​கில இதழ் ஒன்​றைத் தொடங்க வேண்​டும் என விரும்​பிய டாக்​டர் நாயுடு, 1932இல் தமிழ்​நாடு நாளி​த​ழுக்கு சகோ​த​ரப் பத்​தி​ரி​கை​யாக "இந்​தி​யன் எக்ஸ்​பி​ரஸ்" எனும் பெய​ரில் ஓர் ஆங்​கில நாளேட்​டைத் தொடங்​கி​னார்.​ஆனா​லும், சில மாதங்​க​ளி​லேயே "ட்ரீ பிரஸ் ஆப் இந்​தி​யன்" எனும் சுதேச செய்தி நிறு​வ​னத்தை நிறு​விய தேசிய வீரர் எஸ்.சதா​னந்​தம் வச​மா​யிற்று "இந்​தி​யன் எக்ஸ்​பி​ரஸ்".

 

1930-32களில் காந்​தி​ய​டி​கள் நடத்​திய உப்பு சத்​தி​யா​கி​ர​கத்​தை​யும்,​​ சட்​ட​ம​றுப்பு இயக்​கம் முத​லி​ய​வற்றையும் டாக்​டர் நாயுடு எதிர்த்​தது இவ​ரு​டைய அர​சி​யல் வீழ்ச்​சிக்​கும்,​​ தமிழ்​நாடு இத​ழின் நலி​விற்​கும் கார​ண​மா​யிற்று.​ வி​டு​தலை பெற்ற இந்​தி​யா​வில் டாக்​டர் நாயுடு 1951இல் சென்னை மாநி​லச் சட்​ட​மன்ற மேலவை உறுப்​பி​ன​ராக சேலத்​தில் இருந்து காங்​கி​ரஸ் சார்​பில் போட்​டி​யின்​றித் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​டார்.​ 1952இல் நடை​பெற்ற பொதுத்​தேர்த​லில்,​​ சேலம் நக​ரத்​தில் போட்​டி​யிட்டு கம்​யூ​னிஸ்ட் வேட்​பா​ள​ரான மோகன் குமா​ர​மங்​க​லத்​தைத் தோற்​க​டித்து சட்ட மன்ற உறுப்​பி​ன​ரா​னார்.​

 

சிற்​சில சந்​தர்ப்​பங்​க​ளில் பெரி​யா​ருக்​கும்,​​ காம​ரா​ச​ருக்​கும் இடையே பால​மா​க​வும் திகழ்ந்​தார்.​ 23.7.1957இல் அவர் இறந்​த​பொ​ழுது அவ​ரு​டைய இறு​திச் சடங்​கு​கள் ஆர்ய சமா​ஜ சடங்​கு​கள் வழியே எரி​யூட்​டப்​பட்​டது. இ​வ​ரைப் பற்​றிய விரி​வான வாழ்க்கை வர​லாறு வெளி​வ​ரு​தல் இன்​றி​ய​மை​யா​த​தா​கும்.

 

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment