கொளஞ்சியப்பர் கோவில் – விருத்தாசலம்

 விருதாசலம் அருகே இரண்டு கல் தொலைவில் கிராம தேவதையாக முருகனின் அம்சமாகக் கொளஞ்சியப்பர் அருள்பாலிக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன் என் மகள் வீட்டீற்குப் பெண்ணாடம் சென்றபோது இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தோம்.

 
முருகனின் அம்சமாக அருவுருவப் பலிபீடம் அலங்கரிக்கப்பட்டுக் கொளஞ்சியப்பர் என்ற திருநாமத்தில் கொண்டாடப்படுகிறது. கொளஞ்சியப்பரின் பரிவார தெய்வம் முனியாண்டி. மிக அழகான வண்ணந் தீட்டப்பட்ட சுதை சிற்பங்கள் கோவிலை அலங்கரிக்கின்றன. கண்ணாடி அறையில் முருகன் சுடர்விடுகிறான். பங்குனி உத்திரப் பெரு விழாவில் பல்லாயிரம் மக்கள் கூடி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள் என்று பூசகர் கூறினார்.
 
இவ்வாலயத்தில் ஒரு வித்தியாசமான வழிபாட்டுமுறை உண்டு. 
அதாவது பொறாமைக்காரர்களாலும் எதிரிகளாலும் பாதிக்கப்படும் மக்கள், "திக்கற்றவருக்கு தெய்வமே துணை’” என்று இங்கு வந்து சரணடைகிறார்கள். தங்கள் குறைகளை எழுதி இன்குள்ள முனியாண்டி சந்நதி மரத்திலும், வேல்களிலும் கட்டிச் சமர்ப்பிக்கிறார்கள். 
அவ்வாறு கட்டப்படும் உண்மையான புகார்களுக்குக் கொளஞ்சியப்பர் அருளால் தீர்வு குறுகிய காலத்திற்குள் கிடைக்கும் என்பது பக்தர்கள் அனுபவம்.  ஆம்; கொளஞ்சியப்பர் ஆலயம் ஒரு தெய்வ நீதிமன்றம்.
 
கோவில் வளாகத்தில் புள்ளிமான்கள் வளர்க்கப்படுகின்றன.  அங்கு விற்கப்படும் வெள்ளரி, காரட் போன்ற கலவையை வாங்கி அவற்றிற்கு ஊட்டிமகிழலாம்.
 
சொ.வினைதீர்த்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *