Home HistoryErode கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்

கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்

by Dr.K.Subashini
0 comment

 

பதிவு செய்யப்பட்ட நாள்: 8.1.2012

ஏற்பாடு: பவளசங்கரி திருநாவுக்கரசு, ஆரூரன்

படங்கள், ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி

 


ஈரோடு கலைமகள் பள்ளியில் கொடுமணல் ஆய்வின் போதும் மேலும் ஈரோட்டின் வேறு சில பகுதிகளிலும் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், சிற்பங்கள் மிகச் சிறப்பாக காட்சி வைக்கப்பட்டுள்ளதோடு  பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

 

8.1.2012 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து  இந்த அருங்காட்சிப் பொருட்களை பார்த்து புலவர் ராசு அவர்கள் வழங்கிய விளக்கத்தையும் பெற்றோம்.

 

கொடுமணல் ஆய்வு பற்றியும், கலைமகள் பள்ளி பற்றியும், புலவர் ராசு அவர்களின் ஆய்வுகள், முயற்சிகள் பற்றியும் அவர் விளக்கம் தரும் ஒரு ஒலிப்பதிவை முதலில் கேட்பது அறிமுகமாக அமையும்.

 

மண்ணின் குரல் வெளியீடு.

 http://voiceofthf.blogspot.com/2012/03/blog-post_19.html

ஒலிப்பதிவைக் கேட்க: {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/erode12/kalaimakal/kalaimakal1.mp3{/play}

 

கலைமகள்  அருங்காட்சியகத்தில் வைக்கபப்ட்டுள்ள கல்வெட்டுக்கள், சிற்பங்கள் பற்றி புலவர் ராசு அவர்கள் விளக்கம் அளிக்கின்றார்.

ஒலிப்பதிவைக் கேட்க: {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/erode12/kalaimakal/kalaimagalexhibition.mp3{/play}

 

 

புலவர் ராசு விளக்கம் அளிக்கின்றார்.

1074-ம் ஆண்டு குலோத்துங்க சோழனின் கல்வெட்டு. திசையாயிரத்து ஐன்னூற்று நாநாதேசி என்ற ஒரு வியாபாரக் குழுவினர் பாதுகாப்பாகத் தங்கி வாழ கிழங்கு நாட்டு நித்த வினோதம் என்ற ஊரைச் சேர்ந்த வேளாளன் வெண்டுவன் அதிருக்குறையான் எடுத்த மாநகரம் பற்றிய கல்வெட்டு. கிபி 12ம் நூற்றாண்டு கல்வெட்டு.

புலியுடன் போர் செய்யும் ஒரு வீரன்.

பெரிய கிழங்கன் நடுகல்

கொங்கு நாட்டுப் போர் ஒன்றில் வீரமரணம் எய்திய வேட்டுவ  குலத்தலைவனின் நடுகல். கிழங்கு வேட்டுவர் என்ற பிரிவைச் சேர்ந்த பெரிய கிழங்கன் என்பது தலைவன் பெயர் என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈங்கூர் ஐயனார். கி.பி.1156-ம் ஆண்டு குலோத்துங்க சோழனின் அரசியல் அலுவலன் போத்தன் செய்யானான குலோத்துங்கப்பல்லவரையனால் செய்விக்கப்பட்ட ஐயானார் வடிவம். ஐயனார் பூரணை புஷ்கலை என்ற இரு தேவியருடன் எழுந்தருளியிருக்கின்றார்.

குதிரைப் போர்

நான்கு குதிரைகள் பாய்ந்துவருகின்றன. வீரனொருவன் கீழிருந்து அவைகளைத் தடுக்கும் போர்க் காட்சிகளை இந்தக் கல்வெட்டில் காணலாம். இது பெருந்தலையூர் என்னும் இடத்தில் கிடைத்த கி.பி. 15ம் நூற்றாண்டு சிற்பம்.

ஒரு சமணர் கல்வெட்டு

பெருநற்கிள்ளி என்ற அரசன் காலத்தில் மின்னப்பள்ளி தேவருக்கு களப்பக்கோன் என்பவர் அளித்த கொடையைக் குறிக்கும் 10ம் நூற்றாண்டு கல்வெட்டு.

கஜலட்சுமி

கிபி.18ம் நூற்றாண்டு . கிடைத்த இடம் சிவகிரி பொன் காளியம்மன் கோயில்

பணிப்பெண். கோயிலில் கவரி வீசும் நிலையில் உள்ள  கிபி. 11ம் நூற்றாண்டு சிற்பம்.  கிடைத்த இடம் கொடுமுடி.

சோழர் தலைவன் கல்வெட்டு. சோழர் அரசியல் தலைவன் கண்டம் பிடாரியான் செம்பியன் என்பவன் ஒரு வாய்க்கால் அமைத்த செய்தியைக் கூறும் வ்கல்வெட்டின் ஒரு பகுதி. கிபி 11ம் நூற்றாண்டு கல்வெட்டு. கிடைத்த இடம் ஈரோடு கச்சேரிவீதியில் ஒரு வாயிற்படியில்.

முருகன்

கொங்கு நாட்டில் கிடைக்கும் சிற்பங்களில் இது தொண்மையானது. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது கிடைத்த இடம் ஈரோடு காமராஜ் ரோடு.

பெரிய சேமூர் நடுகல்

போர்க்களத்தில் வீர மரணம் எய்திய வீரனுக்கு எடுத்த நடுகல். தலையலங்காரம், காதணி, உடை, கைகளில் குறுவாளும் கேடயமும் சேர்ந்து போர்க்களத்தில் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இது கி.பி 13ம் நூற்றாண்டு நடுகல். கிடைத்த இடம் ஈரோடு அடுத்த சேமூர்.

2 மனிதர்கள் – ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வைக்கப்பட்ட வகையில் கொடுமணல் ஆய்வின் போது கிடைத்த முதுமக்கள் தாழி.

அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட யானையின் எலும்புக் கூடு.

 

  ஈரோடு கலைமகள் பள்ளி

கலைமகள் தந்தை திரு.S.மீனாட்சி சுந்தரனார்

மாணவர்களும் ஆசிரியர்களும் இந்தப் பயணத்தில் நம்முடன் இணைந்து கொண்டனர்

 

புலவர் ராசுவுடன்,. கதிர், திரு.விஸ்வநாதன் மற்றும் நண்பர்கள்

சுபா – பவளா

You may also like

Leave a Comment