Home First Tamil Novel ஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை

ஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை

by Dr.K.Subashini
0 comment

ஆதியூர் அவதானி சரிதம்
வித்துவான் சேஷையங்கார்

1875-ல் தமிழில் வெளிவந்த முதல் நாவல்

ATHIYUR AVADHANI

or
THE SELF – MADE MAN

An Orignal Tamil Noval
DELINEATING PICTURES OF MODERN
HINDU LIFE

by

Professor Seshiengar

MADRAS:
PRINTED AT THE SREEDHARA PRESS,
43, IRISAPPA MAISTRY STREET,
1875


ஸ்ரீ கருணாநிதியே நம:
ஆதியூர் அவதானி சரிதம்

இஃது இக்காலத்தில் ஹிந்துக்களுக்குள் காணப்படும்
குணாகுணங்களையும் நடைகளையும்
வர்ண்ணித்து
வித்துவான் சேஷையங்கார்

நவீனமாகவியற்றிய
கட்டுரைக்கதை

சென்னைப்பட்டினம்
ஸ்ரீதரமுத்திராக்ஷரசாலை
43, இரிசப்ப மேஸ்திரி வீதி
1875


TO
EYRE BURTON POWELL ESQUIRE, MA; CSI
DIRECTOR OF PUBLIC INSTRUCTION, MADRAS.
And
Former Pricipal of the Presidency College:-
This little Volume
is most respectfully inscribed
as a token of Esteem and Gratitude
By
His most affectionate pupil and obedient servant
The Author


ஆசிரிய விருத்தம்

 

சீராருமகராணி விக்டோ ரியாவெனுஞ்
செல்விசெங்கோலினோங்கும்
தேசங்கள்பலவுளும் வீசுபுகழ்மேவுமித்

தென்னிந்தியா நாட்டிலே
ஏராரிளஞ்சிறுவர் வித்தையது கற்றுமன

விருளோட மருளோடவே
ஏற்றவப்பெருமாட்டி யாற்றலுடனாட்டிய

விருங்கலை வகுப்பினுக்கே
நேராருமதிகாரி யூணர்கல்வியைமுதல்

நேயமாயீங்களித்த
நிபுணராம் அயர்பர்ட்டன் பெளவல்துரைபாற்

நேர்மையுடன் கற்றுணர்ந்த | (கலைகள்
பாராருமாணாக்கர் கூட்டத்தோரேழைநான்

பாடுமிச்சிறு நூலவர்
பண்பிற்குமிக்கபே ரன்பிற்குமீடாப்

பரிந்தங்கிதஞ் செய்வேனே

 


 

PREFACE

 

Conceiving that an orignal noval in Tamil delenieating pictures of modern Hindu life would suit the taste of my countrymen, in their present transition stage – a stage in which among other changes, old ideas are giving way to new ones and myths to facts – I have ventured to write and publish this little volume, in the hope that it may perhaps contribute to some small extent to that species of Tamil Literature which Modern Dravidian scholars aim at building up.

The tale is written not in prose after the model of European Novalists, but in an attractive popular form of verse, which our people are generally fond of.

The materials are taken from real life, but are glossed over a little with poetic varnish, and the language employed is simple and unpedantic.

PURSAVAKKAM. }
18th January, 1875 }

D. S.


 

முகவுரை


தமிழ்ப் பாஷையின் மூலமாய்க் கல்வியுங் களிப்புந் தேடும் இந்நாட்டவர் புறநாட்டவர் யாவர்க்கும் ஒருமொழி பகருகின்றேன். ஆதரவுடன் செவிசாய்த்துக் கேட்பாராக. காவியங்களும் கதைகளும், பல பல காலங்களில் நிகழ்ந்த வரலாறுகளை அல்லது நிகழ்ந்தனவாகப் பாவிக்கப்படும் வர்தமானங்களைத் தழுவி நிற்பனவாயினும், ஆக்கியோர் களின் காலத் தனுபவங் களை அவைகள் ஆங்காங்கு காட்டாமற் போகா. நான் சொல்வதற்கோர் நிதர்சனங் காட்டுவேன். ஆதியில் வான்மீகி முனிவர் இயற்றிய வட மொழி இராமாயணத்திலும், பின்பு கம்பர் புனைந்த தென்மொழி இராமாயணத்திலும், தேசவர்ண்ணனை ஜனவர்ண்ணனைகளில், பல குணபேதங்களையும் ஆசாரபேதங்களையுங் காணலாம். இக்கலப்பு கவிகளின் குணதோஷங்களைப் பன்னும் நிபுணர்களில் சிலர்க்கு விபரீத மாகவுந் தோற்றும். கற்பனைக் கதைகளும், ஒருகாலத்தில் இன்பந் தருவன. மற் றொரு காலத்தில் தரா; பாலர்க்குக் களிப்பூட்டுவன முதியர்க்கூட்டா; சிற்றறிவோரை மகிழ்விப் பன பேரறிவோரை மகிழ்வியா. நம்தேயத்துச்சனங்களுள் குடதிசை நூல்களை ஆராய்ந்தறிந்தவர்கள் நமது புராணாதி கதைகளுள் ஊற்றம் வையார். இந்நூதனக் கல்வித்துறைகள யறியாத நமது முதியரோ, இவர்மேல் வசை கூறுவர். மனிதன் சித்தவிருத்தி யிப்படி யாக விருக்கும். நானோவெனில் நமது வித்துவான்கள் வழக்கமாயிறங்குந் துறைகளை விட்டுக் காலத்தியற்கையைத் தழுவிப் புதுத்துறையில்காலிட்டேன்.

இதற்கு முன் யானியற்றிய “குணாகரம்” எனுங்காவியம் “முதிய தமிழும்” “புதிய கருத்தும்” அறிந்தோர்க்கே யன்றிப் பிறர்க்கின்பந்தராது. பழம்பண்டிதர் மனதில் புதுக்கருத்துக்கள் கொள்ளாது. புதுக் கலையில் தேர்ந்தோர்க்கு பழம் பாஷை விள்ளாது. ஆதலால், யாவர்க்கும் பொருளும் புணர்ப்பும் எளிதில் விளங்கும்படி இந்நூலைச் செய்தனன்.

இதிலடங்கிய சங்கதிகள்பல இந்துக்குடும்பங்களில் இக்காலத்திலுள்ளவைகள்தாம். ஆகையால் இது “பொய்பெயர்ப் பூண்டு மெய்பொருள் காட்டும்.”
அதனால், “மெய்ப்பொருட்குரிய அப்பெயராளிகள்”
ஆங்காங்கு “தந்தமைச்சுட்டிய தருமங்காண்புழி
. . . . . . . . . . எந்தமைவாளா யிகழல் தகவன்று”
நல்லோராயின், “உள்வைபுகலிற் கொள்வதுங்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . கடனாம்”
அல்லோர், “எள்ளலையாமுந் தள்ளுதல் வழக்காம்.”
புரிசைப்பாக்கம் }
1875 வருஷம் ஜனவரி மாதம் } . . .

தூ – வீ – சே.

You may also like

Leave a Comment