Home Buddhism சென் புத்தம்

சென் புத்தம்

by Dr.K.Subashini
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்ப் பௌத்தம் தொடர்பான ஒரு முக்கிய ஆவணத்தை இங்கு முன்வைக்கிறது. சமீபத்தில் சென்னையின் ஆசிய நிறுவனம் (Institute of Asian Studies)  நடத்திய ”ஆசியாவின் ஒருங்கிணைந்த பண்பாட்டிற்கு தமிழ்ப் பங்களிப்பு” எனும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட முக்கிய கட்டுரை ஒன்றும், அங்கு இந்தியாவிலேயே முதன்முறையாக காட்சிக்கு வந்த போதிதருமர் பற்றிய அரும் பொருள் காட்சியின் படங்களையும், அக்காட்சியின் முக்கியத்துவம் பற்றிய ஆவணத்தையும் இங்கு காணலாம். பௌத்த மரபில் பெருவழி எனப்படும் மஹாயான நெறியில் மிக முக்கிய அம்சமாக இருக்கும் ஜென் வழி ஒரு தமிழர் உருவாக்கிய வழி என்பதற்கான ஆதாரங்களை இங்கு காணலாம். இதற்கான ஆதாரங்கள் முற்றும் முழுவதுமாக தமிழகத்தில் அழிக்கப்பட நிலையில் சீன,  கொரிய, ஜப்பானிய ஆவணங்கள் இப்பேருண்மையை நிலைநாட்டுவதில் துணை புரிகின்றன. எனவே இக்கருத்தரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் சரித்திர முக்கியதுவம் வாய்ந்ததாக அமைகிறது. இந்திய அமெரிக்கரான ஜோசப் ஆரண்ஹ பெருமுயற்சி எடுத்து சீனா இருமுறை சென்று பல விஷயங்களை ஆவணப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமானது, போதிதருமர் களப்பிரர் காலத்தைச் சேர்ந்தவர் என்பதும். இவரே ஜென் நெறியின் முதல் மகன் என்றும், இவரே தமிழக வர்மக்கலையின் நுணுக்கங்களை சீனாவில் பரப்பியவர் என்பதும் முக்கியமானவை. போதிதர்மர் பற்றிய ஆவணங்கள் தமிழகத்தில் முற்றும் முழுவதும் அழிக்கப்பட்டிருப்பதை மனதில் கொண்டு இவர் களப்பிரர் என்று கூறுகிறார். பின்னால் வந்த பல்லவ மன்னர்கள் களப்பிரர் பற்றிய ஆவணங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாக இவர் நம்புகிறார். தமிழகத்தின் இருண்ட காலம் என்று களப்பிரர் காலத்தைச் சொல்வது மிகக்குறைந்த ஆவணங்கள் (வரலாற்று சான்றுகள்) கிடைப்பதன் காரணத்தினாலும் என்று கொள்ளலாம். மேலும் இவரது போதிதருமர் பற்றிய காட்சியில் ஷவோலின் கோயில் திரைச்சீலை ஓவியங்கள் எப்படி கருத்த நிறமுடைய ஒரு புத்த பிட்சு சீனர்களுக்கு வர்மக்கலையைக் கற்றுத்தருகிறார் என்பதையும் காட்டும். சீனர்களிடமிருந்து வேறுபடுத்த `தாமோ` என்றழைக்கப்படும் போதிதருமர் கருப்பாகவும், கால், கைகளில் முடி அதிகமாக இருப்பதாகவும் காட்டி இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது!

 

அடுத்து ஜப்பானியப் பேராசிரியரான ட்சுவோமு காம்பே சீன ஆவணங்கள் கொண்டு எப்படி போதிதருமர் நாகபட்டிணம் துறைமுகம் வழியாக கடற்பயணம் செய்து, மணிபல்லவம், சாவகம் வழியாக சீனாவை அடைந்திருப்பார் என்ற பட்டுப்பாதையின் கடல்வழி வரைபடத்தைக் காட்டுகிறார்.

 

இப்பகுதியில் இம்முன்று ஆவணங்களும் சேர்ந்த ஒரு கோப்பை (பிடிஎஃப்) வலதுபுறமுள்ள தரவுப்பட்டியலிருந்து சொடுக்கி வாசிக்கலாம்!

 

இவைகளைத் தனித்தனியாக வாசிக்க!

1. போதிதருமர் – ஜென் நெறியின் தலைமகன் (தமிழன்)

2. போதிதருமர் அருங்காட்சிப் பொருட்கள்

3. போதிதருமரின் கடல்வழிச்செலவு

கீழே இக்காட்சியின் போது எடுக்கப்பட்ட சில படங்கள்:

 

Tamil Heritage Foundation proudly presents here documents that support the fact that Bodhidharma, the 1 patriarch of Zen Buddhism was from South India, particularly from Kanchipuram, Tamilnadu. Mr.Joseph Aranha, an Indo-American Journalist argues from evidences that he gathered in his two trips to China and year’s long research on the subject that Bodhidharma was real (and not a myth) and might be a Kallabhra of South India. His exhibit shows strong evidences that he was an Indian and taught Mahayana Buddhism and martial art in China. He is fondly remembered as, ‘damo’ in China, ‘Talma’ in Korea and ‘Daruma’ in Japan.

Prof. Tstuomu Kambe establishes the tentative sea route that Bodhidharma might have taken from the shores of Tamilnadu to China.

We place here the article of Mr. Joseph Aranha presented in a recently held conference called, “The contribution of Tamils to the composite culture of Asia” at Institute of Asian Studies, Chennai and an exhibit on Bodhidharma, a first time event in Tamilnadu. We also present here the brochure released during the conference. We have added here the map and evidence that Dr.Tsutomu Kambe Tstuomu Kambe of Japan present to argue that Bodhidharma was from Kanchipuram, Tamilnadu and took a sea voyage to China in the year 520 CE.

You may view a combined PDF file presenting all the three documents from the menu at your right. You may also prefer to see them separatey at the following links:

1. Mr. Joseph Aranha’s article on Bodhidharma
2. Brochure from the Institute of Asian studies
3. Dr.Tsutomu Kambe’s article on ‘Bodhi Dharma and Oceanic Silk Road’ 

Please see photos of the exhibit below.

 

 காட்சி 1 (நன்றி: நா.கண்ணன்)

Exhibit 1 (Photo N.Kannan)

காட்சி 2 (நன்றி நா.கண்ணன்)

Exhibit 2 (Photo N.Kannan)

காட்சி 3 (நன்றி Sheba Samuels)

Exhibit 3 (Photo Sheba Samuels)

காட்சி 4 (நன்றி Sheba Samuels)

Exhibit 4 (Photo Sheba Samuels)

காட்சி 5 (நன்றி நா.கண்ணன்)

Exhibit 5 (Photo N.Kannan)

காட்சி 6 (நன்றி நா.கண்ணன்)

Exhibit 6 (Photo N.Kannan)

காட்சி 7 (நன்றி Sheba Samuels)

Exhibit 7 (Photo Sheba Samuels)

காட்சி 8 (முனைவர் நா.கண்ணன், முனைவர் காம்பே)

Dr.Narayanan Kannan and Dr. Tstuomu Kambe in front of the exhibit

தால்மா – கொரிய ஓவியம் (நன்றி நா.கண்ணன்)

Darmado (Talma) – a Korean Painting (Photo N.Kannan)


We thank Dr.John Samuel, Director, Institute of Asian Studies for giving permission to present the brochure and Mr. Joseph Aranha for his article and photos.

You may also like

Leave a Comment