Home First Tamil Novel The first Tamil Novel

The first Tamil Novel

by Dr.K.Subashini
0 comment

The first Tamil Novel

P. G. Sundararajan (Chitti)

 

The first Tamil novel was written in verse; not in prose. The form novel has been defined by authoritative dictionaries as being fiction in prose narrative of volume length portraying characters and actions representative of real life in a contemporary plot. Also as a tale presenting a picture of real life, especially of the emotional crisis in the life history of the men and women portrayed. This tradition has recently been by an Indian writing in English, Vikram Seth, a research scholar from Calcutta living in California, distinguished himself three years back by writing an English novel of contemporary American youth not in prose but in sonnets. His novel "The Golden Gate" has had rave reviews from the world press. The Los Angeles Time among others called it tour de force. This achievement has occurred after two hundred and fifty years of the birth of the English novel. Ever since Samuel Richardson published his Pamela in 1740, the novel has been written only in prose. While Vikram Seth’s feat is a departure only in form, the particular verse pattern he adopted is the sonnet perfected by Shakespeare and other stalwarts.

 

There is nothing unconventional in the attempt by the author, of the first Tamil novel, as the tradition of writing it in prose had not yet been established. This novel entitled Aathiyur Avathani, as published in 1875, four years before the first prose narrative by Vedanayakam Pillai came out. Till now Pratapa Mudaliar Charithram was considered to be the first Tamil novel. Vidwan Seshaiengar, who wrote Aadiyur Avadhani had anticipated many of the elements found in the prose narratives, which followed his work.

 

Seshiengar did not break any tradition; on the contrary he dared to set up one. Not that he was not aware of the form of the novel as practiced in the West. He was the first writer in Tamil to use the term ‘Novel’ for his creation, though he adopted the folk idiom and chose to write the story in the Ammanai pattern after the legendry tales like Desingu Rajan Kathai and Alli Arasani Maalai. A sub-title to the English one for the story states ‘or The Self Made Man’ for the benefit of the English educated readers of the day, the author has added an English preface to his work – a practice followed by Vedanayakam Pillai later. Explaining the choice of the form the author says in the preface: ‘Conceiving that an original novel in Tamil delineating picture of modern Hindu life would suit the taste of my countrymen in their present transition stage – a stage in which among other changes, old ideas are giving way to new ones and myths to facts – I have ventured to write and publish this little volume in the hope that it may perhaps contribute to some small extent to that species of Tamil literature which modern Dravidian scholars aim at building up. The tale written not in prose after the model of European novelists, but in an attractive popular form of verse, which our people are generally fond of. The materials are taken from real life, but are glossed over a little with poetic varnish, and the language employed is simple and unpedantic’.

 

The author’s reference to Dravidian scholars seems to point to the fact that he was aware of Vedanyakam Pillai’s endeavour in launching the Tamil novel in prose. He has dedicated the work to Eyre Burton Powell who was the Director of Public Instruction of the then Madras Presidency, when the novel was published. Except that he had served on the staff of the Presidency College, nothing much is known about the author who has the appellation ‘professor’ in the English title page and ‘Vidwan’ in the Tamil version of the same.

 

While one may presume that Vikram Seth’s example would inspire more practitioners of the form to take verse, one notes that not many, succeeded in following the model set by Seshiengar in Tamil. The heralding minstrel of Indian freedom Subramania Barathi whom Seshiengar seems to have anticipated, has left some remarkable autobiographical pieces in verse; but he chose an episode from the epics to compose the powerful narrative Panchali sabatham. His follower Namakkal Ramalingam Pillai too wrote a story in verse called Avanum Avalum. Another lone example is the present day novelist Chinnappa Bharathi’s Deivamagi Ninraan, a story about the travails of a cobbler. It would not be too much to say that Aathiyur Avadhani has not been surpassed so far either in literary quality or in the sweep of survey of life in Tamilnadu in the second half of the last century.

 

Chroniclers of Tamil fiction mention this work in passing without providing any details. The reason might be that no copy of the work is available in our country. The only attempt to introduce this story is by Dr. J. Parthasarathy, who reviewed it in the research journal Pudumai (sept 1976). His notice is a commendable effort in unfolding the richness of this creation. It has been possible to deal in detail about this novel here owing to my friend Sivapadasundaram obtaining a Xeroxed copy of the novel from the British Library, London. In the context of Vikram Seth getting the Sahitya Academy Award in addition to other international applause, it is worth considering whether this century old work does not deserve at least belated attention. Research scholars might try to obtain more details about this author.

 

Adhiyur Avadhani narrates the story of a woman, Gandhari, and her son who having been left destitute on the death of the father undergo untold suffering at the hands of the dad man’s brother in whose family they take refuge. Vinayalan, the destitute son, so named by the author to show that he is the protagonist, takes his mother to Madras from Aadhiyur a village near Pondicherry. On the way the boy falls ill and is helped by a kindly woman. When they reach Madras after more suffering. Vettuni the brother of Vinayalan’s father arrives there having been sacked by his employer in the village. Gandhari, with her usual kindness receives her brother-in-law and his family and helps them to settle down. Vettuni is jealous of the self made Vinalayanwho is now prosperous. Egged on by his good-for-nothing son in law, Azhikandan, Vettuni and his supporters tease Vinalayan and all kinds of quarrels and fights ensue. Vettuni also succeeds in poisoning his sister-in-law against her own son. Vinalayan chided by his own mother, leaves hoe and ekes out a livelihood by coaching school children. He himself takes to studying further and passes many examinations. His teacher Dronar helps to fulfill his desire by getting him admitted into the medical college. Vinalayan makes his mark as a surgeon and thus earns him the title Avathani, which connotes that he is able to analyse the various parts of the human anatomy.

 

As Avathani’s work involves dissection and post mortem of bodies, the hostile relatives accuse him of practicing a profession not commensurate with his caste as he is a Brahmin. His tradition bound mother also joins the opposition and all his arguments to explain the dignity of the profession fail to convince her as she is afraid of ex-communication by her own community. She decides to get over the problem by arranging for his marriage to a girl named palaamurudu daughter of a couple named Aahaavazhi and Pohaavazhi. The marriage itself is beset with many quarrels stemming from the demands made by the bride’s people. His uncle’s family takes advantage of the situation and continues to tease him along with other hostile relatives.

 

Avdhani loses his health but soon recovers the same and becomes prosperous. The revival of his prosperity induces the hostile relatives to come Bck to him with feigned happiness and Gandhari again commits the mistake of receiving them. Predictably the relatives start their nefarious schemes again history is repeated in the form of more quarrels and domestic strife. Advani’s own wife and mother-inlaw join the fray and their intrangience brings a lot of misery to him. Successive child bearing by his wiferesults in infant mortality until only two boys and a girl survive. Failing again to convince his mother abou the intentions of the relatives, Avadhani goes back to Aathiyur and wanders about aimlessly with his elder son for a while. Meanwhile Gandhari succeeds in celebrating the upanayanam of her grandson despite all the troubles.

 

Returning to Madras, Avadhani happens to meet Devadatta, a kshtriya widow, who is beautiful, intelligent and compassionate. The encounter results in his falling in love with her. Avadhani convinces her by quoting Manu that he could marry her even though he is already married., citing marital compatibility. Devadatta nurses him through his illness suffered through running a thorn. When he is undergoing treatment at Aathiyur, the hostile relatives abuse him for leading an immoral life and spread all kinds of scandal about the two. Avadhani sends her back to Madras where he joins her after regaining his health. In a touching scene both settle down and begin to pusue their studies. When the mischief makers arrive in Madras, Avadhani succeeds in creating dissensions among them. Avadhani manages to regularise his relationship with Devadatta through a proper marriage, assisted by a well meaning friend, and Gandhari, till then reconcilable changes her mind to the extent where she defends the action by citing a previous instance of widow re-marriage in the family of one Neiveli Seshaiengar.

 

With the happy ending, the author points out a moral that Dayadhi hostility leads to misery. He also advises girls to sing the Ammanai narrative and lead good life.

 

Invoking the grace of God in composing the verse narrative, the author Seshiengar explains that he chose the A,mmanai pattern so that people in all walks of life could easily comprehend the content. The verse form employed was generally prevalent during that time.

 

Avdhani loses his health but soon recovers the same and becomes prosperous. The revival of his prosperity induces the hostile relatives to come back to him with feigned happiness and Gandhari again commits the mistake of receiving them. Predictably the relatives start their nefarious schemes again history is repeated in the form of more quarrels and domestic strife. Advani’s own wife and mother-in-law join the fray and their intransigence brings a lot of misery to him. Successive child bearing by his wife results in infant mortality until only two boys and a girl survive. Failing again to convince his mother about the intentions of the relatives, Avadhani goes back to Aathiyur and wanders about aimlessly with his elder son for a while. Meanwhile Gandhari succeeds in celebrating the upanayanam of her grandson despite all the troubles.

 

Returning to Madras, Avadhani happens to meet Devadatta, a kshtriya widow, who is beautiful, intelligent and compassionate. The encounter results in his falling in love with her. Avadhani convinces her by quoting Manu that he could marry her even though he is already married., citing marital compatibility. Devadatta nurses him through his illness suffered through running a thorn. When he is undergoing treatment at Aathiyur, the hostile relatives abuse him for leading an immoral life and spread all kinds of scandal about the two. Avadhani sends her back to Madras where he joins her after regaining his health. In a touching scene both settle down and begin to pursue their studies. When the mischief-makers arrive in Madras, Avadhani succeeds in creating dissensions among them. Avadhani manages to regularise his relationship with Devadatta through a proper marriage, assisted by a well-meaning friend, and Gandhari, till then reconcilable changes her mind to the extent where she defends the action by citing a previous instance of widow re-marriage in the family of one Neiveli Seshaiengar.

 

With the happy ending, the author points out a moral that Dayadhi hostility leads to misery. He also advises girls to sing the Ammanai narrative and lead good life.

 

Invoking the grace of God in composing the verse narrative, the author Seshiengar explains that he chose the Ammanai pattern so that people in all walks of life could easily comprehend the content. The verse form employed was generally prevalent during that time.

 

ஆதியூர் வாழும் அவதானி தன் கதையை
வேதியன் நல்ல வினையாளன் தன் கதையை
வழக்கத்தமிழாலே மாந்தர் படித்தறிய
பழக்கத்தால் அம்மானைப் பாட்டாகத் தாம் பகர
எழுதி முடிப்பதற்கே ஈசனே முன்னடைவாய்

 

The names of the characters are chosen to connote the specific qualities possessed by them. Their very names help the process of the narrative as they have to act in a manner corresponding to the traits inherent in them. Characters endowed with positive traits are named respectively Ghandari, Avadhani, Dronar Anukulam and the likes, while the villanious roles are played by those named Vettuni, Kunduni, Azhikandan, Aahavazhi, Pohavazhi and Palamurudu. Seshaiengar takes care to inform the readers of the reasons for naming the characters in the manner he did.

 

அன்னை பெயரும் அவள் தங்கை தன் பெயரும்
பிள்ளை அவள் கொழுனன் பேருமவர் தம்பி பெயர்
பெண்ணின் பெயரும் பெருங்குணமும் பேசாக்கால்
எண்ணி வருங்காதை இனிது விளங்காது

******

அன்னவர் தம்பி ஆழியாக் கறவுடையார்
இன்னல் விளைவிக்க எடுக்கும் விரகுடையார்
********

சுட்டெரிக்கும் கண்களுடன் தொன்றுமவர் நின்றவிடம்
வெட்டிநிலம் பார்த்தால் வெந்திருக்கும் ஏழடி தான்
வெட்டுணி தன் மகள் தான் வீரப்பிடாரியென்பாள்
பட்டணம் போதாது பட்டாங்கடிப்பதற்கு

 

Aathiyuravadhani is a social document depicting the conditions in a particular community more than a hundred years ago. In the midst of the hard traditions which beset the people, the author has also detected attempts at change through individual courtage. When Avadhani takes to surgery his own mother chastises him for going against the norms of his own community. She joins the group who abuse him.

 

உன் ஜாதி என்ன? உறு குடியின் கீர்த்தியென்னெ?
ஒ! உன் சாதி செய்யும் புழுக்கைத் தொழிலைச்
சாதி கெடுக்கும் சதிகாரா எங்கிருந்தாய்?
நீதி மதந்துறந்து நீங்கினாற்தோஷமில்லை
பிணந்தின்னியன்றோ பிணமறுத்து சோதிப்பான்
பிணந்தீட்டுப் பிடியாதோ பார்ப்பானை?

 

Avadhani’s reply is a frontal attack on bogus orthodoxy which was decieving the people. He tells his mother that people are being elevated by religious pretenders who practice ostentatious rituals based on fraudulent conservatives.

 

கட்டுக்கட்டாக கனத்த வீபூதியிட்டு
மட்டில்லா நாமம் வழித்துக் குழையவிட்டு
அம்மன் ப்ரசாதம் ஆத்துமா வீடேறும்
இம்மை சுகம் தரும் இந்தாரும் என்று சொல்லி
ஏமாற்றி மூடர்களை யெத்திப் பணம் பறிக்கும்
சீமான்கள் ஈங்கிலர் பின் தேடி நான் போகாவோ காண்!

 

This outspoken criticism of Avadhani seems to equip him later for the revolutionary role he is to play by braving the wrath of the community to marry a widow. As a first novel though in verse this work anticipates reformist trends seen in the works of other pioneer novelists like Madaviah who supported widow remarriage. The reference to an example in the family of a namesake of the author seems to suggest that the incident might be the echo of an autobiographical event. Refering to the change of mind in Gandhari who was all along opposing all the acts of of her son Avadhani, the author predicts that widow remarriage and inter-caste marriage at that, would be the order of the day in the future and utters a warning that it would be futile to check the pace of social change with the passage of time.

 

நெல்வேலி சேஷய்யங்கார் நேயமுள்ள புத்திரிக்குச்
சொல்லு மறுமணம் தான் தோஷமில்லையென்று செய்தார்
கைம்பெண் விவாகமிந்தக் காலத்திலுண்டாச்சு
ஆம்புவியெங்கும் அதுவே தலையெடுக்கும்
காலத்தியற் கையதனைக் கட்ட முடியாது

 

In addition to portraying the customs of the people during his time, like quarrels in a joint family,price for the bride and not the groom for the marriages and prejudices against man and woman being affectionate to one another, the author supplies local colour by describing the vocabulary of the funding relatives when they begin to abuse one another. The abuses employed are highly suggestive of the motives behind the sweet words.

 

பேரென்ன வுன்றன் பெரிய தனந்தானுமென்ன
சீரென்ன செல்வமென்ன சீமையறியாதோ?
உடுக்கத்துணியுமற்றாய் உண்ணப்பிடியுமற்றாய்
படுக்கப் பாய்தானுமற்றாய் பட்டாங்கடிக்கிறையே

*********

இவ்வார்த்தை கேட்டவரும் இங்கே வா அம்மணி நீ
ஒவ்வாத முண்டமிவள் உள்வயணம் நீ அறியாய்
கழுநீரிறுக்குமிடம் கண்ணுற்றுப் பார்ப்பேயேல்
விழுவாட்கு வாய்க்கரிசி வேண்டியது சிந்தி நிற்கும்.

 

Weekend Express dated February 04,1989 under the caption ‘The First Tamil Novel’

E-text input: Mr.K.Narasiah, Chennai

 


 

ஆதியூர் அவதானி சரிதம்
முதல் தமிழ் நாவல்

 

தமிழில் அச்சு இயந்திர வசதி பரவலாகப் பயன்பட்ட சமயத்தில் கடந்த நூற்றாண்டின் மத்தியிலே எழுத்தறிவு பெறாதவர்களின் அறிவு வளர்ச்சிக்காக கர்ணபரம்பரையாக வந்த தமிழ் வீரர்களின் கதைகள் பாடல்களாக அச்சில் வெளியிடப்பட்டன. விழாக்களிலும் சந்தைகளிலும் இத்தகைய கதைப்பாடல் புத்தகங்கள் விற்கப்பட்டன. எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இந்தப் பாடல்களை ராகம் போட்டுப் படிக்க படிப்பறியாத மக்கள் கூட்டமாய் இருந்து கேட்டு ரசிப்பது வழக்கமாய் இருந்தது. தேசிங்குராசன் கதை அல்லி அரசாணி மாலை, கட்டபொம்மன் கதைப்பாடல் முதலிய வீரசாகசக் கதைகள்தான் ஒருகாலத்தில் பாமர மக்களின் அறிவுக்கும் பொழுதுபோக்குக்கும் உதவின. அம்மானை என்ற இலகுவான பாடல் வடிவத்தை சென்னை புரசைவாக்கம் வித்துவான் சேஷையங்கார் என்ற பேராசிரியர் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் (1875) இந்துக்களுள் காணப்படும் குணா குணங்களையும் நடைகளையும் வருணித்து நாவல் என்ற பெயர் கொடுத்து "ஆதியூர் அவதானி சரிதம்" என்ற தலைப்புடன் எழுதி வெளியிட்டார்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை உரைநடையில் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவல்தான் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்று மதிப்பிட்டு வந்திருக்கிறோம். அது வெளிவந்தது 1879 ஆண்டு. அதற்கு நான்கு ஆண்டுகள் முன்பே 1875 இல் ஆதியூர் அவதானி சரிதம் வெளிவந்து விட்டது. இது அம்மானைப் பாடல் வடிவில் இருந்தபோதிலும் ஆசிரியர் சே¨ஷையங்கார் உறுதியளிப்பது போல் இதிலடங்கிய சங்கதிகள் பல இந்துக் கும்பங்களில் இக்காலத்தில் உள்ளவைகள்தாம். ஆதலால் இது ‘பொய்ப் பெயர் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்’ நாவல் வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற தகுதியைப் பெறுகிறது.

நாவல் என்ற இலக்கிய வடிவம் உரைநடையில்தான் இருக்கவேண்டும் என்பது இதுவரை ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. "நாவல் என்பது கற்பனையின்அடிப்படையில் சமகால வாழ்கையில் காணும் மக்களையும் அவர்களுடைய வளர்ச்சியையும் பற்றிய உரைநடை நெடுங்கதை" என்று அதிகாரபூர்வமான ஆங்கில மொழி அகராதிகள் கூறுகின்றன. 1740 இல் சாமுவல் ரிச்சட்சன் என்ற ஆங்கில ஆசிரியர் பமீலா என்ற பெயரில் (உரைநடையில்) எழுதிய நாவலைத் தொடர்ந்து இதுகாறும் நாவல் என்ற வடிவம் உரைநடையில்தான் இருக்கவேண்டும் என்ற மரபு வளர்ந்தது. ஆயினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலைபெற்றிருந்த இந்த மரபு, சென்ற 1986 ம் ஆண்டு விக்ரம் சேட் என்ற இந்திய ஆசிரியரால் மீறப்பட்டது. " The Golden Gate " என்ற பெயரில் இவர் எழுதி வெளியிட்ட ஆங்கில நாவல் கவிதை வடிவில் ஷேக்ஸ்பியர் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள் பக்குவப் படுத்திய ஸான்னெட் (sonnett) வடிவில் அமைந்தது. இந்தப் படைப்பின் உள்ளடக்கம் சமகால வாழ்வில் அமெரிக்காவில் காணப்படும் நிலையற்ற ஓர் இளைய சமூதாயத்தைப் பற்றியது. நாவலுக்குரிய கற்பனையும் அளவும் அந்தக் கவிதைப்படைப்பில் உள்ளதால் அது கவிதை வடிவில் இருந்தாலும் அதை ‘நாவல்’ என்று இன்றைய இலக்கிய உலகம் வரவேற்றிருக்கிறது. இந்த நாவல் ஆங்கில உலகில் பல பரிசுகளைப் பெற்று லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி பிரபலம் பெற்றிருக்கிறது. இந்திய நாட்டில் சாகித்திய அகாதெமியும் இந்தப் படைப்பை நாவல் என்றே மதித்துப் பரிசு கொடுத்தது. இந்த அடிப்படையில் பார்க்கும் ¡து வித்துவான் தூ வீ சே¨ஷையங்காரின் ஆதியூர் அவதானி சரிதம் தமிழில் தோன்றிய முதல் நாவல் என்று கொள்ளலாம்.

ஆகவே நாவல் உரைநடையில்தான் இருக்க வேண்டும் என்ற மரபு மாறிச்செய்யுள் வடிவிலும் எழுதப்படலாம் என்பதை இலக்கிய உலகம் அங்கீகரித்துவிட்டது என்றே கொள்ளலாம். ஆனால் விக்ரம் சேட் ஆங்கில நாவல் தோன்றி இருநூறாண்டுகளுக்கு பிறகு நிகழ்த்திய சாதனையை வித்துவான் சே¨ஷையங்கார் தமிழ் நாவல் உரைநடையில் கூடத் தோன்றுவதற்கு முன்பே நிகழ்த்திவிட்டார். தாம் எழுதுவது நாவல்தான் என்பதை அவர் மிகவும் உறுதியாக நூலின் தலைப்பில் குறிப்பிட்டதோடு ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதிய முகவுரையிலும் விளக்கியிருக்கிறார்.

சேஷையங்கார் எழுதி வைத்த ஆங்கில முன்னுரையில் சில திராவிட அறிஞர்கள் தமிழில் நாவல்கள் எழுதும் முயற்சியை மேற்கொண்டுருப்பதைப்பற்றியும் குறிப்பிடுகிறார். அந்த அறிஞர்கள் உரைநடையில் எழுதினார்கள் என்பதையும் தாம் ஜனரஞ்சகமாக கவிதை வடிவில் எழுதியிருப்பதராகவும் சொல்கிறார் ஆகவே தமிழ் நாவலின் தொடக்க காலத்தில் நாவல் படைக்கும் முயற்சியில் முன்னோடிகள் ஈடுபட்டிருந்ததை இவர் அறிந்திருந்தார் போலும். (1875 இல் வெளிவந்த நாவலின் இரு முகவுரைகளும் அப்படியே இப்பதிப்பில் வெளியிடப்படுகின்றன.)
ஆதியூர் அவதானி நாவலைப்பற்றி பரவலாக அறியப்படவில்லை. தமிழ்நாவல் வரலாற்றை எழதியவர்கள் சிலர் இந்த நூலின் பெயரை மட்டும் குறிப்பிட்டு இதன் முழுவாசகம் கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இதைப்பற்றிய ஓர் விமர்சனம் டாக்டர் ஜே. பார்த்தசாரதியால் புலமை (செப்டம்பர் 1975) இதழில் வெளியிடப்பட்டது. அவருடைய உறவினரான போராசிரியர் மு. இராகவையங்காரிடம் ஒரு பிரதி இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். வேறு எங்கும் நம்நாட்டில் இந்த பிரதி கிடைக்கவில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதிய "தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்" என்ற நூலிலும் இந்த நாவலின் விவரத்தைச் சொல்லத்தகவல் கிடைக்கவில்லை. நாலாண்டுகளுக்கு முன்பு சிவபாதசுந்தரம் லண்டன் சென்றபோது அங்கே பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் ஒருபிரதி இருப்பதைக்கண்டு அதன் xerox பிரதி ஒன்றை பெற்று வந்தார். கிரவுன் அளவில் அச்சிடப்பட்ட இந்த புத்தகம் மொத்தம் நூறுபக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் சேஷையங்கார் பற்றி முழு விவரம் கிடைக்கவில்லை. நூலின் கடைசி பக்கத்தில் கண்டிருந்த ‘பிழை திருத்தம்’ பகுதியில் 15 பிழைகளே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது அன்றைய அச்சுக்கலை வளர்ச்சிக்கு சான்றாகிறது.
கதை பாண்டிச்சேரி அருகில் ஆதியூர் என்னும் கிராமத்தில் தொடங்குகிறது. உத்தமன் என்ற பிராமணக் குடும்பத்தலைவன் இறந்துவிட மனைவி காந்தாரியும் மகன் வினையாளன் என்பவனும் அவன் ‘சகலை’ வெட்டுணியின் வீட்டில் வாழ நேரிடுகிறது. நாளடைவில் வினையாளனின் உபநயனமும் வெட்டுணியின் தம்பி குண்டுணியின் மகள் வீரப்பிடாரியின் திருமணமும் நடக்கின்றன. குடும்பம் ஏழ்மையில் வாடுகிறது. வெட்டுணி பேராளுர் என்ற கிராமத்தில் பணியாற்றுகிறான். அவனுடைய மகனுக்கு நல்ல படிப்பு வசதி இல்லாததால் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுகிறான். வினையாளன் படிப்பில் முன்னேறுவதைக் கண்ட குண்டுணியும் அவனுடைய மருமகன் அழிகண்டனும் பொறாமை கொண்டு துன்புறுத்துகிறார்கள். வெட்டுணியின் மனைவி மானவதி இதற்கு தூண்டுகோல். இறுதியில் காந்தாரியும் வினையாளனும் வெளியேறுகிறார்கள்.
சென்னைக்குச் செல்லும் வழியில் சூணாம்பேட்டுக் கருகில் ஒருகாட்டில் வினையாளன் நோய்வாய் படுகிறான். நல்ல உள்ளம் படைத்த ஓர் மூதாட்டி அவர்களுக்கு புகலிடம் கொடுத்து உதவுகிறாள். அவர்களிருவரும் சென்னையடைந்த போது வேலையிழந்த வெட்டுணியும் அவனுடைய குடும்பத்தாரும் வந்து சேருகின்றனர். காந்தாரி அவர்களை வரவேற்று தரவு தருகிறாள். இடையில் கல்வியில் முன்னேறிவிட்ட வினையாளன் மீது அவர்கள் மீண்டும் பொறாமை அடைய பல சச்சரவுகள் ஏற்படுகின்றன. வெட்டுணியின் துர்போதனையின் விளைவாக காந்தாரி தன் மகனை கடிந்து கொள்ள வினையாளன் மனம்வெறுத்து வெளியேறி ஓரு வீட்டுத்திண்ணையில் சரணடைகிறான். அந்த வீட்டுக்காரரின் உதவியால் சில மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு பச்சையப்பன் பள்ளியில் கல்வி பயின்று பல பரிட்சைகளில் தேர்வடைகிறான். துரோணர் என்ற அவனுடைய ஆசிரியர் அவனை மருத்துவக்கல்லூரியில் சேர்கிறார். உடற்கூறு பற்றிய நுணுக்கங்களை முற்றிலும் அறிந்து கொள்ளும் திறமை கொண்ட வினையாளன் அதுமுதல் அவதானி என்று அழைக்கப்படுகிறான்.
மருத்துவக் கல்லூரியில் பிணங்களை அறுத்துச் சோதனை செய்யும் பணி ஒரு பிராமணன் செய்யக்கூடியதல்ல என்று உறவினர்கள் புகார் செய்து இம்சை செய்கிறார்கள். அவதானி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ளாத காந்தாரியும் வெறுப்புத் தெரிவிக்கிறாள். ஜாதியைவிட்டு விலக்கிவிடுவார்கள் என்ற அச்சம். இந்த இக்கட்டைத்தீர்க்கும் வகையில் காந்தாரி அவதானியின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறாள்.

திருமணம் முழுவதும் பலசிக்கல்களிடையே நிறைவேறுகிறது மணமகளின் பெற்றோர்கள் பேராசையுடன் அதிகத்தொகை கேட்கிறார்கள். இதன் விளைவாக அவதானி பெரிதும் கடன் படுகிறான். தன்னுடைய தாயாரின் சொல்லைத்தட்ட மனமில்லாமல் மணம்புரிந்து கொள்கிறான். அதற்குப்பிறகும் வெட்டுணியின் ஆட்கள் அவதானியைப்பற்றி பல வதந்திகளைக் கிளப்பி விடுகிறார்கள். நல்ல வேளையாக ஒரு நண்பனின் உதவியைக் கொண்டு அவதானி மீண்டும் பணம் சம்பாதிக்கத் தொடங்குகிறான்.

அவனுடைய முன்னேற்றத்தைக்கண்டு சசிக்காத அந்த உறவினர்கள் அவனுடைய நலனைக் கருதுவதாகப் பாசாங்கு செய்து மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளுகிறார்கள். சச்சரவுகள் தொடர்கின்றன. கபடமற்ற காந்தாரி அவர்களை நம்பி அவதானியின் துன்பங்களுக்கு அறியாமல் இடங்கொடுக்கிறாள். அவதானியின் மாமியார் மகளுடன் சேர்ந்து கொண்டு அவனுக்குப் பல கஷ்டங்களை ஏற்படுத்துகிறாள். அவனுடைய மனைவி பலாமுருடு பல குழைந்தைக¨ப்பெற்றும் இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும்தான் நிலைக்கின்றனர். உறவினரின் கொடுமைகளைப்பற்றித்தன் தாயாருக்குப் புரிய வைக்க முடியாத நிலையில் அவதானி ஆதயூருக்குத் திரும்புகிறான். தன்னுடைய மூத்த மகனுடன் அவன் பல இடங்களில் சுற்றி அலைகிறான். நிலையைச் சற்றும் புரிந்து கொள்ளாத காந்தாரி அவதானியின் மகனுக்கு உபநயனம் ஏற்பாடு செய்கிறாள். ஆகவே அவதானி சென்னைக்கு திரும்பும் அவசியம் ஏற்படுகிறது.

சென்னையில் தேவதத்தை என்ற க்ஷத்திரியக்குல கைம்பெண் ஒருத்தியை அவதானி சந்திக்கிறான். தன்னுடைய நிலைமையை பயன்படுத்தி கொண்டு தனக்கு இன்னல் விளைவிக்க வருபவர்களிடமிருந்து தப்பிக்க தேவதத்தை அவதானியின் உதவியை நாடுகிறாள் இருவருக்குமிடையே நட்பு முற்றிக் காதலாக மாறுகிறது. தனக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்ககும் நிலையில் நான் மீண்டும் மணம் புரிந்து கொள்ளலாமா என்பதற்கு அவதானி மனுதர்ம சாஸ்திரத்தில் தாரம் தேடுகிறான். இதற்கிடையே அவதானியின் காலில் முள் குத்தியதால் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறும் பொருட்டு இருவரும் ஆதியூர் செல்கிறார்கள். அங்கு கிராமத்தவர்கள் அவர்களை ஒழுக்கம் தவறியவர்களாக குற்றம் சாட்டி இகழ்கிறார்கள். அவதானி தேவதத்தையை சென்னைக்கு அனுப்பிவிட்டு தனது நோய் தீர்ந்த பிறகு அவளுடன் சேர்ந்து இருவரும் ஆங்கிலம் வடமொழி இலக்கியங்களைப் படித்த வண்ணம் இணைந்து வாழ்கிறார்கள்.

கொடுமையே உருவான பழைய உறவினர்கள் மீண்டும் அவர்களைப் பழித்து பல வதந்திகளைப் பரப்புகிறார்கள். காந்தாரியும் அவர்களைநம்பி அவனை வெறுக்கிறாள். தேவதத்தையை வெளியேற்றுவதற்காகக் காந்தாரி அவதானியுடைய மகள் திருமணத்தை நடத்த முற்படுகிறாள்.

ஆனால் திருமணவீட்டிலே ஒரே களேபரம். ஒருவருக்கொருவர் சண்டையில் எதுவும் நடக்கவில்லை. அச்சமயத்தில் திறமைசாலியான தேவதத்தையை வரவழைத்து அவதானி அவள்கையில் நிர்வாகப் பொறுப்பைக் கொடுக்கிறார். அங்கொருவரும் இங்கொருவருமாகப் பிரிந்து கிடந்த தாயாதியர் ஆச்சரியப்படும்படி திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கின்றன. எல்லோரும் மகிழ்ச்சியோடு ஒன்று சேருகிறர்கள். ஆயினும் ஊரிலே தேவதத்தையின் உறவு வைப்பாட்டி என்று கருதுவதைத் தடுக்க அவதானி அவளை முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பி அனுகூலர் என்ற தமது உற்ற நண்பரின் உதவியை நாடுகிறார். அவரும்

"கனமாம் வினாயகரை கண்டு கொணர்ந்திடுவேன்
சாத்திரங் கற்ற சதுரரைத்தானழைப்பேன்"
என்றுரை தந்தவரும் ஈச்சுரப் பட்டரெனும்
நன்றாய் மறையுணர்ந்த நல்லவர் கையாலே
வேதியர் கையால் விவாகச் சடங்கிழைத்தே
ஆதியூராரும் அரிவை கழுத்தினிலே
மங்கலமாகு நல்ல மாங்கிலியம் தான் முடித்தார்
திங்களு ரோகிணிபோல் சேர்ந்தவர் தாமிருந்தார்

 

இந்தப் புரட்சிகரமான முடிவுதான் இக்கதை நாவலின் புதுமை. கலப்பு மணமும் விதவா விவாகமும் ஒன்று சேர்ந்த புதுமையை நாம் சற்றும் எதிர்பார்க்காத காலத்தில் 1875 இல் ஆசிரியர் சேஷையங்கார் துணிந்து செயல்படத்திய விந்தையைப் பார்க்கிறோம். இதில் அதிசயம் என்ன வென்றால் முதலில் வாயில்வந்தபடி திட்டிய தாயாரே ஒப்புக்கொள்கிறாள்.

சங்கதி எங்கும் தழைத்துப் பரவியது
அங்குறு தாயும் அறிந்துள்ளே யலுற்றாள்
பேதை மதியாலே பிள்ளைமேல் தண்டெடுத்தோம்
ஏதினிச் செய்வோம் இணங்கி நடக்கவேண்டும்

 

என்று சொல்லி நடந்ததை ஏற்றுக் கொண்டது மாத்திரமல்ல கலப்பு மணமும் கைம்பெண் விவாகமும் இனிமேல் நிலைத்து நிற்க வேண்டுய கொள்கைதான் என்று முடிவு கட்டியதுதான் நாவலுக்கு முத்தாய்ப்பாக அமைகிறது. தாயார் புதிய நிலைமையை ஏற்றுக் கொள்வது மாத்திரமல்ல. அதற்கு உதாரணத்தையும் கூறுவதுதான் புதிய திருப்பமாக படுகிறது. தாயார் சொல்கிறாள்:

நெல்வேலிச் சே¨ஷையங்கார் நேயமுள்ளபுத்திரிக்குச்
சொல்லு மறுமணந்தான் தோஷமில்லை என்று செய்தார்
கைம்பெண் விவாக மிந்தகாலத்தி லுண்டாச்சு
அம்புவி எங்கும் அதுவே தலையெடுக்கும்
காலத் தியற்கைதனை கட்ட முடியாது
கோல மகனுமந்தக் கொம்பனையைத் தான் மணந்தான்
சாதிவிட்ட சாதியென்று தள்ளலினி வாய்க்காது
புவனத் திதுவும் புதுமையாய் விட்டதிப்போ.

விதவை மறுமணத்தைப்பற்றி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் பாரதியார் மாதவையா வா.ரா. முதலியோர்கள் பேச முன்வந்தார்கள். ஜி சுப்ரமணிய ஐயர் தயங்கி தயங்கி பம்பாயில் நடத்தினார். ஆனால் 1875 இல் வித்வான் சேஷையங்கார் "கைம்பெண்விவாகமிந்தக் காலத்திலுண்டாச்சு" என்றும் சாதிவிட்ட சாதி என்று தள்ளலினி வாய்க்காது. என்றுங் கட்டியங் கூறுவதோடு "அம்புவி எங்கும் அதுவே தலை எடுக்கும்" என்றும் அறுதியிட்டு கூறிய வார்த்தைகள்தான் இந்த நாவலின் பண்பு.

"நெல்வேலி சேஷையங்கார் நேயமுடன் புத்திரிக்குச் சொல்லு மறுமணந்தான் தோஷமில்லை என்று செய்தார்" என்று வரும் குறிப்பைக்கொண்டுடாக்டர் ஜே. பார்த்தசாரதி, சேஷையங்கார் என்ற பெயர் ஒற்றுமை அடிப்படையில் "இந்நூலில் ஆசிரியர் தம் சொந்த அனுபவங்களையே தாம்பட்ட பாடுகளனைத்தையுமே உயிரோவியங்களாக சொல்லி வடித்துவிட்டார்" என்று முடிவு கட்டுகிறார் (புலமை செப். 1976). ஆனால் இங்கே "நெய்வேலி சேஷையங்கார்" என்று குறிப்பிடப் படுபவர் உண்மை வாழ்க்கையில் (நாவல் வெளிவருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) நாகர் கோயில் நீதி மன்றத்தில் ‘பிளீடர்’ என்ற வழக்கறிஞர் தொழில் பார்த்த திருநெல்வேலி சே¨ஷையங்கார் என்ற செய்தி இப்போது கிடைத்திருக்கிறது. சிங்கப்பூர் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் டாக்டர் ஆர். சுந்தரலிங்கம் எழுதிய Politics and National Awakaning in South India என்ற ஆய்வு நூலில் கண்ட குறிப்பைக் கொண்டு லண்டன் இந்தியா ஆபீஸ் நூலகத்திலே உள்ள micro film சுருளில் பதிவு செய்யப்பட்டிருந்த 1873 க்கான Athenium and Daily news என்ற சென்னை நாளிதழ் களிலிருந்து பிரதி செய்யப்பட்ட விவரங்களை சென்னை Indian Express Weekend இதழில் (6.10.90) காணலாம். டாக்டர் சுந்தரலிங்கத்தின் குறிப்பை அறிமுகப் படுத்தியவர் நண்பர் ராஜ் கௌதமன்.

Athenium and Daily news என்ற நாளிதழ் சென்னையிலிருந்து 1845-1885 காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. 1873 மே மாதம் 19 ம் தேதியிட்ட இதழில் மேலே குறிப்பிடப்பட்ட சே¨ஷையங்கார் வெளியிட்ட வாக்கு மூலத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
"நான் திருநெல்வேலியைச்சேர்ந்த வடகலை வைஷ்ணவ பிராமணன். திருவிதாங்கூர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிகின்றேன். என்னுடைய ஒரே மகள் தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் கணவனை இழந்துவிட்டாள் என்ற செய்தி கேட்டுமிகவும் அதிர்ந்து போனேன். என்னுடைய அருமை மகள் ஒரு விதவையாக வாழ்ந்து அவமதிப்புக்கும் அவமானத்திற்கும் உள்ளாகி வாழ்கை முழுவதும் துன்பத்தை அனுபவிக்கும் விதவை என்ற நிலையை அடைந்துவிட்டது எனக்கு தீராத கவலையாக நேர்ந்துவிட்டது" பின்னர் வங்காளத்தில் சில கைம்பெண் திருமணங்களை நடத்தியதோடு அன்றைய பிரிட்டிஷ் சர்காரின் சட்டப்படி அத்தகைய திருமணங்களின் விளைவாகப்பிறந்த குழைந்தைகளுக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப் பட்டதையும் அறிந்த சே¨ஷையங்கார் தமது மகளுக்கும் மறுமணம் செய்விக்க தீர்மானித்தார். இதையொட்டி தமது சமூகத்தில் ஏற்படக்கூடிய எதிர்ப்பைச் சந்திக்கும் வகையில் பல நண்பர்களை கலந்தாலோசித்தார். ஹிந்து சாஸ்திரங்களைத் கற்றுத்தேர்ந்த பலர் அவருக்கு தரவுதர முன்வந்தார்கள். இறுதியில் திருவிதாங்கூர் சமஸ்தான திவானின் ஆசியுடன் அவருடை மகளின் திருமணம் நடந்தேறியது.

ஆனால் திருமண நாளன்று எதிரிகள் அவரை கொல்ல முயன்றனர். சில பிராமணர்களும் மறவர்களும் அவருடைய வீட்டைத் தாக்கியதோடு மணப்பந்தலுக்கு தீ வைத்து விட்டார்கள். இந்தச் சம்பவத்தின் விளைவாகத் தொடரப்பட்ட வழக்கில் சிலருக்கு விடுதலையும் ஒருவருக்கு ஐம்பது ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பல இடையூறுகள் சேஷையங்காருக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தன. அவர்குடியிருந்த வீட்டுக்காரர் அவரை வெளியேற்றி விட்டார். அப்பொழுதும் சில நண்பர்கள் அவருக்கு தரவாக இருந்ததைக்கண்டு பொறாமை கொண்ட ஏதிரிகள் சேஷையங்காரை ஜாதியை விட்டு விலக்கும் அரசாங்க ஆணை ஒன்றை வெளியிடுவதில் வெற்றிகண்டுவிட்டார்கள். அந்த ஆணையில் சேஷையங்கார் தமது விதவை மகளுக்கு மறுமணம் செய்வித்ததால் ஜாதி சாரத்தை மீறிவிட்டார் என்றும் அதற்காக ஜாதியை விட்டு விலக்கப்பட்டிருப்பதாகவும் இனி அவர் கோயில் குளங்களுக்குச் செல்வதற்கு தகுதியற்றவர் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. இதன் விளைவாக அவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பிராமணப் பணியாளன் விலகிக் கொண்டுவிட்டான். குடும்பப் புரோகிதர் அவரைப் புறக்கணித்தர். மற்றும் நாவிதர், சலவையாளர் போன்றவர்கள் அவருக்கு பணியாற்ற மறுத்து விட்டார்கள். அரசு ஆணைக்கு அஞ்சி திருநெல்வேலியில் இருந்த அவருடைய உறவினர்கள் சிலரும் அவரை புறக்கணிக்கத் தொடங்கினார்கள். இந்த விவரங்களையும் இந்த நிலைக்கு காரணமாயிருந்த சில பிராமணர்களையும் சேஷையங்கார் தமது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.

சேஷையங்காருக்கு ஏற்பட்ட துன்பத்தைப்பற்றி அந்த ஆங்கில நாளேட்டின் பிரிட்டிஷ் ஆசிரியர் அரசாங்கத்தின் ஆணையைக் கண்டித்து மிகவும் கடுமையான தலையங்கங்கள் எழுதியிருந்தார். சேஷையங்காருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் இந்த விஷயத்தில் திருவாங்கூர் அரசாங்கம் மேற்கோண்ட நடவடிக்கையை கைவிடுமாறு சென்னை அரசாங்கம் இவ்விஷயத்தில் செயல்பட வேண்டுமென்றும் அந்த ஆசிரியர் வலியுருத்தி இருந்தார் . இதையொட்டி சில விசாரணைகள் தொடங்கி சேஷையங்காருக்கு உரிய பரிகாரம் அளிக்க வேண்டுமென்று அன்றைய சென்னை கவர்னர் உத்தரவு பிறப்பித்தார். பின்னர் சேஷையங்கார் விதவை மறுமணத்திற்காக ஓரு அமைப்பை ஆரம்பித்தார். (இந்த வரலாற்றுச் சம்பவத்தின் முழுவிவரங்கள் Express Week End 6-10-90 இதழில் சிவபாதசுந்தரம் எழுதிய Hindu Widow Remarriage : A cuase celebre என்ற கட்டுரையில் அடங்கியுள்ளன)

சமகால நிகழ்சிகளை பின்புலமாக வைத்து நாவல் எழுதிய ஆசிரியர் சேஷையங்கார் அந்தக் கதையில் காணப்படும் பாத்திரங்களின் பண்புகளுக்கு ஏற்றபடி பெயர்கள் கொடுத்திருந்தார். வெட்டுணி, காவழி, வீரப்பிடாரி, பலாமுருடு, போகாவழி, துரோணர், அனுகூலன் போன்ற பெயர்கள் அந்தப் பாத்திரங்களின் இயல்பை விளக்குகின்றன. அம்மானை வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் கவிதை நடையில் பேச்சு வழக்கிலுள்ள எளிமையான சொற்களே பயன்படத்தப் பட்டிருக்கின்றன. கதைபாத்திரங் களுக்கிடையே ஏற்படும் சச்ரவுக்கிடையே அவர்கள் கையாளும் வசைச்சொற்கள் அவர்களுடைய உணர்ச்சிகளை தெளிவாகப்பிரதிபலிக்கின்றன.
அன்றைய சமூதாயத்தில் விவேகமற்ற வெறுப்பும் பொறாமையுங்கொண்ட தாயாதி உறவினர்கள் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதற்கு அவர்கள் கையாண்ட வசைமொழிகளே அத்தாட்சியாகும். இவ்வகையில் அவதானியின் எதிரிகள் மேற்கொண்ட சொல்லாட்சி ஆசிரியரின் கலைத்திறனால் ஓரு சிறு அகராதியாகவே அமைந்து விடுகிறது.

இந்த நாவலின் கதாநாயாகனுக்கு முதலில் வினையாளன் என்ற பெயரிட்டிருப்பது ஆசிரியரின் ஆங்கில விமரிசன இலக்கியப் பரிச்சியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. முக்கியபாத்திரம் என்ற முறையில் கதைப்போக்கில் பல நிகழ்ச்சிகளுக்குக் காரணமானவன் என்ற பொருள்படும் இந்தப் பெயர் ஆங்கிலத்தில் கையாளப்படும் Protogonist என்ற சொல்லுக்கு இணையானது. பின்னர் வினையாளன் கல்வியில் தேர்ந்து பல விஷயங்கள் அறிந்து கொண்ட நிலையில் அவதானி என்ற பெயரை அடைகிறான். அஷ்டாவதானம் சதாவதானம் என்ற பட்டங்களைப் பெறும் அறிஞர்கள் வரிசையில் சேரும் தகுதிபெறும் தொடக்கத்தையும் இந்தப் பெயர் குறிக்கிறது. இன்றும் அவதானி என்ற பெயர் பழக்கத்தில் இருப்பதைக் காண்கிறோம்.
அன்று நிலவிய சமூதாய ஜாதிக் கட்டுப்பாடு களையும் ஆசிரியர் அவதானியின் மருத்துவக் கல்வியின் மூலம் சுட்டிக்காட்டுவது கதையின் நடப்பியல் அம்சத்திற்கு உயிர் கொடுத்து நாவலுக்கான இலக்கணத்தை அவர் அறிந்திருப்பதையும் விளக்குகிறது. கல்வித்துறையில் பணியாற்றிய ஆசிரியர் மருத்துவப் பயிற்சியின் நுணுக்கங்களையும் நன்றாக அறிந்திருந்தார். ஓர் இலக்கிய வடிவத்தின் முதல் முயற்சி என்ற அளவில் ஆசிரியர் இவ்வகையில் பாராட்டுக்குறிய வெற்றி கண்டிருக்கிறார்.

அவதானி தேகத்தவயவங்கள் தான்பகுத்தே
அவதானமாக அவற்றுண்ணி லையறிந்தான்
ஆய்ந்தறியும் வேளை அவனிப்பிராமணர்கள்
வாய்ந்த மதக்குறும்பால் வண்மையில் மத்திமர்கள்
ஈங்கிவர்கள் பொங்கியெழுந்தாரே மேல் வெகுண்டு
ஆங்காரத்தோடே அவதானி முன்திரண்டு
உன்சாதி என்ன உறுகுடியின் கீர்த்தி என்ன
புன்சாதி செய்யும் புழுக்கைத் தொழிலிழைத்துச்
சாதி கெடுக்கும் சதிகாரா எங்கிருந்தாய்
நீதிமதந்துறந்து நீங்கினாற் தோஷமில்லை
பிணந்தின்னியன்றோ பிணமறுத்துச் சோதிப்பான்

 

ஜாதி சாரம் என்ற தளைகளால் கட்டுண்டு சுயசிந்தனையின்றி மக்கள் தவித்த அந்த நாட்களிலே அவதானி ஒரு புரட்சிக்காரனாக உருவெடுக்கிறான். சம்பிரதாயத்திற்கு அடிமையாகி குடும்ப விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு தான் பெற்ற மகனையே வெறுத்துப் பழிக்கும் காந்தாரியின் செயல் அவதானியின் அறச்சினத்தை கிளப்பி விடுகிறது. போலிகளின் பாசாங்கில் மயங்கிய தன் தாயாரை எதிர்த்து வாதிடும் நிர்பந்தம் அவனுக்கு ஏற்படுகிறது. வெறும் சடங்குளாலும் உண்மைக்குப் புறம்பான வெளித் தோற்றத்தினாலும் மக்களை ஏமாற்று பவர்களின் விருப்பத்திற்கேற்ப தான் நடந்து கொள்ள முடியாது என்பதை மனம் வெகுண்டு கூறுகிறான்.

கட்டுக் கட்டாக கனக்க விபூதியிட்டு
மட்டில்லா நாமம் வழித்துக்குழையவிட்டு
மாணிக்கப் பட்டையிட்ட வண்ணப் பெருந்தூண்போல்
சாணுக்குமேலகலச் சாயக்கரை பொலிய
ஒப்புத் துகிலுடித்தி யோரைந்தும் எட்டும்சொல்லி
வைப்பாட்டி கொண்டையிலே வாடும் மருவெடுத்தே
அம்மன் பிரசாதம் ஆத்துமா யீடேறும்
இம்மைச் சுகந்தருகும் இந்தாறும் என்றுசொல்லி
ஏமாற்றி மூடர்களை எத்திப் பணம்பறிக்கும்
சீமான்கள் ஈங்கிவர்பின் தேடிநான் போகவோகாண்

 

அவதானியின் முற்போக்குச் சிந்தனைகளும் அன்றைய சமூதாய நிலையைப்பற்றி அவன் கொண்டிருந்த கருத்துகளும் தெளிவாக வெளிப்படுவதற்கும் அவன் தாயாரே மேலும் காரணமாகிறாள். அவனுக்கு திருமணம் ஏற்பாடு செய்கிறாள். அவளுடைய திட்டப்படி அவதானி மணக்க வேண்டிய குடும்பத்தைப்பற்றி அவனுக்குத தெரிந்த தகவல்கள் அவனுடைய ஒப்புதலுக்கு நேர்மாறாக இருக்கின்றன. தன்னுடைய மனத்திற்கு இசைந்த பெண்ணையே மனைவியாக கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிடுகிறான். தாய்ப்பாசம் மிகுந்தவனாதலால் தன்னுடைய கொள்கையை மரியாதையுடன் எடுத்துரைக்கிறான்.

தகப்பனொரு பேயன் தாயுமொரு பேமாலம்
சுகத்திற் குரியபெண்ணோ சொல்லும் பலாமுரடு
பசிக்குப் பனம்பழத்தைப் பாராமற்றின்றிடப்பின்
மசக்கித் தலைசுழற்றும் வன்பித்தம் வாய்க்குமோதான்
மனத்திற் கிசைந்தவொறு மங்கையவள்கிட்டினக்கால்
கனிவாய் இருந்தெனது காலத்தைப் பின்னிடுவேன்
மனது கனியவில்லை மாதா செய்யுமணம்
இனிதாக தோன்றவில்லை என்றார் அவதானி

 

அவதானியின் மனப்பான்மை காந்தாரிக்கு விபரீதமாகத் தோன்றுகிறது தான் பல இடையூறுகளுக்கு இடையே கட்டிக்காத்து வளர்த்த புதல்வன் சம்பிராயத்தை எதிர்ப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஜாதிக் கட்டுப்பாட்டை தன் மகன் மீண்டும் மீற முயல்வது அவளுக்கு ஆத்திரமூட்டுகிறது. மகனென்றுகூடப் பொறுக்காமல் வசைபாடுகிறாள்.

அன்றைய சமூதாயத்தில் இன்றைய பாராட்டுக்குரிய அம்சங்களும் புலப்பட்டது வியப்புக்குரியது. வரதட்சணைக் கொடுமையை எதிர்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகவும் பெண்விடுதலைக்கு அடிப்படையாகவும் விளங்கிய ஓர் பழக்கம். தாய்ப்பாசம் தன்னுடைய எதிர்ப்பைவிட வலிமையாக இருந்ததால் அவதானி "பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட" அந்த திருமணத்திற்கு இசைய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுகிறான். ஆனால் வரதட்சணைக்கு மாறாக அவனே மணப்பெண்ணுக்குப் பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது அன்று நிலவிய சமூதாய நியதி. ஒருகல்யாணத்தரகரின் தலையீட்டால் அவன் இருநூறுபாய் கொடுக்கவேண்டுமென்று தீர்மானிக்கப்படுகிறது. அந்தத் தொகையை காந்தாரி சேகரித்த முறை:

ஓபுலுச்செட்டியிடம் ஓதுகடன் நூறாகச்
சாபுல் உசேனிடத்துத் தண்டிய தீரைம்பதுடன்
கையில் பணஞ்சமயக் கல்யாணக் காரியங்கள்
மெய்யாகச் செய்துவந்தாள் மேன்மையுள்ளகாந்தாரி
தொப்பை முதலிகையில் சொல்லுந் தொகை கொடுத்தான்

 

திருமணங்களில் கலகமும் பரஸ்பர வெறுப்பும் தலைதூக்குவது அன்று இயல்பாக இருந்தது .உறவினர்களின் பலதரப்பட்ட நோக்கங்களின் விளைவாகப் புகார்களும் வதந்திகளும் பரவுவதற்குச் சடங்குகளே காரணமாயிருந்தன. பொறாமையும் வெறுப்பும் நிறைந்த உறவினர்கள் அவதானியின் திருமணத்தில் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை.

நாகவல்லி நாலில் நடந்த ஒரு காரியத்தில்
சோகமுறவேது தொடர்ந்த தவதானியர்க்கும்
அடைகாய்சுருளை அகவாயிற் கொள்ளுகையில்
மடக்கியே கண்கிட்டவைத்தது தானறிந்து
கலியாணப் பெண்ணும் கருதியுரைக்கலுற்றாள்
வயிற்றெறிச்சற் பெண்ணுக்கு மாலைக்கண்ணாமுடையான்

 

இந்த நாவலின் சிரியர் சேஷையங்கார் ஒரு முழுமையான சமூதாயச்சார்பு கொண்ட படைப்பாளி. இவர் வாழ்ந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட கலாசார மறுமலர்ச்சியின் தாக்கத்தைப் பெற்று சீர்திருத்தச் சிந்தனைகளில் ஈடுபட்டவர் தனக்கு விருப்பமில்லாத பெண்ணைத் தாயாரின் கட்டாயத்தினால் மணந்து துன்பப்படும் கதாநாயகன் அறிவும் அழகும் நிறைந்த ஒரு பிற ஜாதிப் பெண்ணைச் சந்திக்க நேரிடும் போது நடந்து கொள்ளும் முறை ஆசிரியரின் தீர்க்க தரிசனத்திற்கு சான்றாகிறது.

இந்தக் கவிதை நாவலில் தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் உள்ள கிராமங்கள் சென்னைக்குச் செல்லும் வழி போன்றவை தத்ரூபமாக வர்ணிக்கப்பட்டு நடப்பியல் உத்திக்கு உயிர் கொடுக்கிறது. மற்றும் பாண்டிச்சேரியை சுற்றியுள்ள இடங்களைப் பற்றிய தகவல்களும் மேலும் ஆராய்ச்சிக்கு உதவும். நெல்வேலி சேஷையங்கார் போன்ற பெயர்கள் ஆசிரியரின் சமகால உணர்வையும் வாழ்க்கையிலிருந்தே கருப்பொருளை எடுத்துக் கொண்டதையும் குறிக்கின்றன.

கற்பனையின் அடிப்படையில் மக்களுக்கப் பரிச்சயமான அம்சங்களைக்கொண்டு புனையப்பட்ட இந்த நாவல் ஒரு சிறப்பான சமூதாய ஆவணம். இத்தகைய படைப்பு பல ஆய்வாளர்கள் விமர்சகர்களின் கவனத்திற்கு வராதது வியப்புதான். ஆங்கிலத்தில் விக்ரம்சேட் மரபுமீறி சாதித்ததை ஒரு முன்னோடி உத்தியைக்கொண்டு தமிழ் உரைநடை நாவலின் தோற்றத்திற்கு முன்பே இந்த ஆசிரியர் வெற்றியுடன் சாதித்துவிட்டார். இந்தவகையில் இவரைப்பின்பற்றி பலர் கவிதை எழுத வராததற்கு இந்த படைப்பைபற்றி அதிகம் அறியப்படாததுதான் காரணம் என்று கொள்ளலாம். நாமக்கல் கவிஞரின் ‘அவனும் அவளும்’, கு. சின்னப்ப பாரதியின் ‘தெய்வமாகி நின்றாள்’ என்ற கவிதைக் கதைகளை இவ்வகையில் குறிப்பிடலாம்.

கவிதையில் நாவல் எழுதலாம் என்றால் ‘சிலப்பதிகாரம்’ போன்ற பேரிலக்கியங்களையும் நாவல் என்று சொலக்கூடாதா என்ற கேள்வி எழுப்பப்படலாம். நாவல் என்ற ஆங்கில வடிவம் சிலப்பதிகாரம் தோன்றி 1500 ஆண்டுகக்குப் பின்புதான் கையாளப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தமிழில் நாவலை கவிதைவடிவில் எழுதிய முதல் படைப்பாளியான சேஷையங்கார் முதன் முதலில் சீர்திருத்தக் கருத்துக்களைச் சமகால வாழ்வுடன் இணைத்துக் கதை சொல்லும் சிறப்பையும் அடைகிறார்.

பெ.கோ. சுந்தரராஜன்(சிட்டி)
சோ. சிவபாத சுந்தரம்
கோயம்புத்தூர் } டிசம்பர் 1994 }

You may also like

Leave a Comment