திருநீற்றுப்பச்சிலை – Sweet basil

திருநீற்றுப்பச்சிலை – Sweet basil

திரு.அ.சுகுமாரன்

 

Sept 24, 2009
 

 

காஞ்சிபுரத்திலிருந்து சுங்குவார் சத்திரம் வழியாக திருவருள் செல்லும் வழியில் அமைந்துள்ளது  திருவிற்கோலம். இங்கு திருவிற்கோலநாதர் இறைவனாகவும், அன்னை உமா பார்வதி திரிபுரசுந்தரியாகவும் காட்சியளிக்கின்றனர்.   இங்கு  திருத்தல மரம் உருத்திரட்சடை என்னும் திருநீற்றுப்பச்சிலை, தீர்த்தம் அச்சிறுகேனி அக்னி தீர்த்தம்
மிகவும் பழமைவாய்ந்தது. அச்சிறுக்கேணி எனப்படும் இக்குளத்தில் தவளைகள் இல்லாமல் இருப்பது அதிசயமாகும். சுற்றிலும் வயல்கள் இருந்தும் இத்திருக்குளத்தில் தவளைகள் இல்லையாம். பிடித்து வந்து விட்டாலும் வெளியே சென்று விடுகின்றனவாம்.

இத்திருக்குளத்தில் நீரடி இறைவனை வழிபட்டால் புத்திரபேறு இல்லா தோருக்கு கிடைக்குமாம்.

சுவாமி மணல் லிங்கம் இதை பலாலயம் செய்யும் வழக்கம் இல்லை. 16 முழு வேட்டி சுவாமிக்கு சாத்தப் படுகிறது.

கூவம் ஆற்றின் கரையில் இருந்து தீர்த்தம் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்திற்கு பதில் வேறு தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்தால் இறைவன் மேனி எங்கும் எறும்புகள் ஊர்கின்றனவாம். இதை வைத்து பூஜையின் முறைகேடுகள் கண்டுபிடித்து விடலாம்.இத்திருக்கோவிலின் தலவிருட்சம்  தற்போது அழிந்துவிட்டது.

எனினும் சிறப்பான மூலிகைகளை மக்களுக்கு அறிமுகம் செய்ய அவைகளை
தல விருஷங்களாக வைக்கும் மரபு நம்மிடம் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவே இந்த செய்தி .

 

உருத்திரட்சடை இதற்கு திருநீற்றுப் பச்சிலை, பச்சை சப்ஜா என வேறு பெயர்களும் உண்டு.

Tamil – Thiruneetru pachilai
English – Sweet basil
Telugu – hutulasi
Malayalam – Ram thulasi
Hindi – Babui tulsi
Botanical name – Ocimum basilicum

இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது. இது இந்தியா முழுவதும் காணப்படும் ஒருவகை செடியினமாகும். திருநீற்றுப் பச்சை சிலேஷ்சர்த்தி தன்னை
விரிநீற்றைப் போலாக்கு மெய்யே பெரிய சுரத்திரத்த வாந்தி சரமருசி நில்லா வுருத்திரச்ச டைக்கே யுரை—இது அகத்தியர் குணபாடம் இதன் இலை கற்பூரத்தின் தன்மை கொண்டது.
வியர்வையை பெருக்கச் செய்யும்.  இலைச்சாறு வாந்தி சுரம் ஆகியவற்றைப் போக்கும்.
 

விதை

கர்ப்பிணிப் பெண்களுக்கு இதன் விதையை தக்க முறைப்படி மருந்து செய்து கொடுக்க தாய்க்கு நல்லது.

வேர்
வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க வல்லது. இதன் வேரை இடித்து பொடித்து கஷாயம் செய்து காலை மாலை அருந்திவந்தால் வயிற்றில் பூச்சிகளை அழித்து வயிற்றுப் புண்களை ஆற்றும். சிறுநீர் பெருக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும் சிறுநீரகத்தை பலப்படுத்தி சிறுநீரை பெருக்கும். இதனால் உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது.

 

முகப்பரு உள்ளவர்கள் திருநீற்றுப் பச்சிலையை கசக்கி சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு நீங்கும்.

இதன் இலைச்சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டு வந்தால் காதுவலி, சீழ்பிடித்தல் நீங்கும்.

திருநீற்றுப் பச்சிலையின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து மூக்கில் உறிஞ்சுவதால் மூக்கில் உள்ள கிருமிகள் வெளியேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *