Home Tamil MedicineHerbs கீழாநெல்லி – PHYLLANTHUS AMARUS

கீழாநெல்லி – PHYLLANTHUS AMARUS

by Dr.K.Subashini
0 comment

கீழாநெல்லி

திரு.அ.சுகுமாரன்

 

Oct 23, 2009

கீழாநெல்லி, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைகளுக்கு சர்வதேச அளவில் காப்புரிமை (patent) பெற தமிழக அரசு ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டதாக செய்திகள் வந்தது .
ஆனால் இது வரை வாங்கியாகிவிட்டதா .? அல்லது ஆட்சி மாறியதும் திட்டமும் மாறிவிட்டாதா தெரியவில்லை.

தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை  கீழாநெல்லியாகத்தான் இருக்கும் .மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி  என்று பலரும் இலவச வைத்திய முறை மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டதும் கூறுவார்கள் . ஆனால் அணுபான  முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது .கீழாநெல்லி  மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில்  பயன்படுகின்றது.

 
நமது சித்தர்கள் தமது சித்தத்தை அடக்கி ,ஞானத்தை பெருக்கி உடம்பை வளர்த்து
உயிரை வளர்க்கும் உபாயத்தை நமக்கு அன்புடன் விட்டுசென்றுள்ளனர் .ஆனால்
நாம் ஆங்கிலேயரின் ஆட்ச்சியில் இருந்தபோது இததகைய பாரம்பரிய உயர் மருத்துவ முறைகளை உதாசீனப்படுத்திவிட்டோம் .அவைகளை தொகுத்து வைக்க மறந்து விட்டோன் .பலாயிரக்கனக்கான ஒல்லை சுவடிகள் படிஎடுக்கப்படாமல்
ஆடிப்பெருக்கில் ஆற்றினில் விடப்பட்டது ..சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மூலிகைகள்தான்.

மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம் இல்லை என்றே கூறலாம்.
ஒவ்வரு உள்ளுருப்பையும்  பாதுகாக்க ஒவ்வரு மூலிகைகைகளை நமது சித்தர்கள் நமக்கு காட்டிச்சென்றுள்ளனர் .

சிறுநீரகத்தைக் காக்கும்.சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை, ,  நெருஞ்சில் , அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி மற்றும் அதன் வகைகள், ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி, கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம், புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும் , நித்திய  கல்யாணியும் ,இதயத்திற்கு செம்பருத்தி  மூளைக்கு வல்லாரை என  இவ்வாறு வகைப்படுத்தி உள்ளனர் .இதில் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு கீழாநெல்லிதான் காக்கும் நண்பன்.

மிகக் கொடிய நோய்களுக்கான மருந்துகள் சித்த மருத்துவத்தில்இருந்தாலும்கூட,  முதலில் வேர் பாரு ,தழை பாரு மிஞ்சினா மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரு’ என்பது சித்தர்களின் வழி .இலைகளில் இருக்கும் வைத்திய முறைகள் ,நோய்களை
வராமல் தடுக்கும் இயற்க்கை முறை .உணவிலேயே சரிப்படுத்த நாம் எடுக்கும் முதல் வழி .

 

இதன் வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.
இதன் தாவரப்பெயர் -: PHYLLANTHUS AMARUS.
இதன்  தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.

heikru –  Marathi:  , 
தமிழ்  கீழாநெல்லி 
Malayalam: chirukizhukanelli,  chukannakizhanelli
Telugu: erra usirika
Kannada:kempu kirunelli, kempu nelanelli
Bengali: Hazarmani
Sanskrit:bhumyamalaki, ujjhata

 

இது ஒரு குறுஞ் செடி, இரண்டு அடிவரை வளரும் . மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்தசிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புறத்தில்   கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். கீழா நெல்லி  என அதானால் தன பெயர் வந்தது போலும் .  கீழா நெல்லி   தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்.

 செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள்.அனைத்தும் பயன் தரும்
 மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.

கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த அதை  பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.இத்க்து ஒரு அனுபவ வைத்தியம்.

 

கீழாநெல்லி தைலமாகவும் செய்து பயன்ப்படுத்தப் படுகிறது. நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் கொதிக்கவைத்து வடித்து தலை முழுகி வரலாம்
நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.
இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக்குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.
கீழாநெல்லி அரைத்து இத்துடன் வில்வ இலைச்சாறு கறிப்பான் இலைக்சாறு, நாயுருவி வேருடன் பிடுங்கி அதனை இடித்து இவற்றை எல்லாம் சேர்த்து வடிகட்டி ஒரு நாளைக்கு 2 வேளை தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வர தீராத மஞ்சள் காமாலை நோய் தீரும்.
நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பறந்தே போய்விடும்.

 

பொதுவாக கல்லீரலுக்கும் கண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையினால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம்.  பொதுவாக இரவு படுக்கப் போகும் முன்பு, இரு கண்களையும் குளிர் நீரால் கழுவி, சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் கண்களுக்குக் குளிர்ச்சியும், ஒருவித புத்துணர்ச்சியும் கிடைத்து, கண்களின் உட்புறத்திலுள்ள நரம்புகளுக்குச் சக்தி கிடைத்து தூய்மைப்படுத்தி கண்களைப் பாதுகாக்கிறது.

நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சேர்த்து 2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக் குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும்.
நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பறந்தே போய்விடும்.

இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும்.

கிழா நெல்லியை வாரம் ஒரு முறையாவது உபயோகித்து வர கல்லிரல் வலுவாக இருக்கும் .கல்லிரளுக்கு ,அதிக வேலைகளை உள்ளன . இதயமும் ,கல்லிரலும்  ஒன்றுதான் இருக்கிறது எனவே அவைகளை கவனமுடன் வருமுன் காப்பது மிக அவசியம் .

You may also like

Leave a Comment