Home Tamil MedicineHerbs கொத்தமல்லி – coriander

கொத்தமல்லி – coriander

by Dr.K.Subashini
0 comment

கொத்தமல்லி   தனியா

திரு.அ.சுகுமாரன்

 

Nov 15, 2009

 

கொத்தமல்லி என்றால் இலை, அதன் விதை இரண்டுமே  கொத்தமல்லி என்றுதான் அழைக்கப்படுகிறது. எங்காவது கொத்தமல்லியைத் தனியாக எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா ? கொத்தாகவே எடுப்பதால் கொத்தமல்லி போலும் ! கொத்தமல்லி விதை  மட்டும் ‘தனியா’ என்று அழைக்கப் படுகிறது. விதை என்றால் அதன் காய்ந்த பழம்தான். அதன் இலை, தண்டு, விதை அனைத்துமே உபயோகிக்கத்தக்கவை. மருத்துவகுணம் மிக்கவை . 

 

கொத்தமல்லி விதை பற்றி பைபிளில் கூறப்பட்டுள்ளது; இசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்துமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறப்படுகிறது . தமிழர் சமையலில் இது நீங்காத இடம் பெற்றது .உலகெங்கும் விளைகிறது ; இந்தியாவிலும் எல்லா இடங்களிலும் விளைகிறது. அனைவருக்கும் தேவை என்பதால் அது எங்கும் விளைகிறது போலும் .
 
பல்வேறு  நாடுகளிலும் கொத்தமல்லியின் பெயர்கள் –
 
Japanese    – Parsley
French       – coriandre
German      – Koriander
Italian        – coriandolo
Spanish     – cilantro, culantro
Arabic        – kizbara
Burmese     – nannambin (leaves), nannamzee (seed)
Chinese     – hsiang tsai, yen-sui, yuen sai, yuin si tsoi (leaves)
Indian        – dhanyia, dhuniah, kothimbir, kotimear, kotimli (seed)
                   dhania patta, dhania sabz, hara dhania (leaf)
Indonesian  – ketumbar
Lao            – phak hom pom
Malay        – daun ketumba(r) (leaves), ketumba(r) (seed)
Sinhalese   – kottamalli (seed), kottamalli kolle (leaves)
Tamil       – kothamilee
Thai        – pak chee (met)
English     – cilantro , coriander
Hindi       – धनिया , dhaniyaa
 
Coriander என்ற பெயரே கிரேக்க மொழி மூலத்தில் இருந்துதான் வந்தது எனப்படுகிறது .அது ஆதியில் மத்தியக்  கிழக்கு நாடுகளில் தோன்றியதாகக் கூறப்படுகிறது .
 
கொத்தமல்லி 100  கிராமில் உள்ள சத்துகள் –
 
Energy 20 kcal   100 kJ
Carbohydrates     4 g
Dietary fiber  3 g
Fat 0.5 g
Protein 2 g
Vitamin A equiv.  337 μg  37%
Vitamin C  27 mg 45%
 
நமது மசாலாவில் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது தனியாதான்
ஆனால் அதை "தனியா" உபயோகிக்கமாட்டார்கள்
மிளகாயும் மஞ்சளும் அத்துடன் சேர்ந்தால் தான் மசாலா !
 
முக்கியச் செய்தி கொத்தமல்லி மனிதனின் முக்கிய தாதுவை அபிவிருத்தி செய்யும் . அதாங்க வயகரா சமாச்சாரம் !
ஈரல்  சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும்;
மன நோய், ரத்தச் சூடு, வயிற்றுப் பொருமல்,அஜீரணம், மயக்கம்,
நாவறட்சி,  வாயுக் கோளாறு, நீர்க்கடுப்பு, மூச்சடைப்பு,சளி, மூலச் சூடு
கண் நோய் ,பித்த வாந்தி அனைத்தையும் குணப்படுத்தும் .
இன்னும் இரவில் உறக்கம் வராமை, மூட்டுவலி, வாய்க் கசப்பு
இவற்றைத் தீர்க்கும் ஒரு மூலாதார  மூலிகை இது.
நம் நாட்டில்  மட்டுமல்லாது எல்லா நாடுகளிலும் உணவைப் பதப்படுத்தும் மசாலாவில் அதிகம் இடம் பிடித்துள்ளது தனியா. அளவுக்கு மீறிய மதுபோதை ஏறியவருக்கு  இதன் விதையை வறுத்துப் பொடித்து நீரில் கொடுக்க போதை குறையும் .
 
கொத்தமல்லி சுக்குக் காபி உங்களுக்குத் தெரிந்ததுதான் .

உடலின் எந்த பாகம் தடித்திருந்தாலும், சொர சொர என்று இருந்தால் கொத்தமல்லி இலையை அப்பகுதியில் நன்றாகத் தேய்த்து குளிக்க நாளடைவில் மாறும். இதன் இலை சாற்றில் பால் கலந்து தொடர்ந்து குடித்துவர மனத் தளர்வு, சோர்வு அனைத்தும் தீரும் .இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நரம்புகளுக்கு வலுவூட்டும் .
 
Coriander seed oil is an aromatic stimulant, a carminative (remedial in
flatulence), an appetizer and a digestant stimulating the stomach and
intestines. It is generally beneficial to the nervous system.ulcers.
 
Recent studies have supported its use as a stomach soother for both adults
and colicky babies. Coriander contains an antioxidant that helps prevent
animal fats from turning rancid. It also contains substances that kill
meat-spoiling bacteria and fungi.

இறைச்சியைப் பதப்படுத்தக் கொத்தமல்லிக்கு இணை எதுவும் கிடையாது . இன்னும் எத்தனையோ பயன்கள் !

தெரியாமலா நமது உணவில் தவறாமல் இருக்கு இந்த தனியா !

ஆனால் விலை மலிவாக இருப்பதால் இதை நாம் மதிப்பதில்லை ; என்ன செய்வது ?

You may also like

Leave a Comment