Tuesday, December 23, 2014 Posted by Dr.Subashini     வணக்கம். கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.  இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் ஒரு விழியப் பதிவு இணைகின்றது. மேல்சித்தாமூர் எனும் சிற்றூர் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னரான பழமையான சமண பீடம் அமைந்திருக்கும் பகுதி இது.  இந்த மாவட்டத்திற்கு மட்டுமன்றி  தமிழகத்தில் மிக முக்கியமான சமணRead More →

 Sunday, March 22, 2015 Posted by Dr.Subashini    வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று   இன்று வெளியீடு காண்கின்றது.            மேல்சித்தாமூர் சமண மடம் இருக்கும் அதே ஊரில் அருகாமையில் இருப்பது ஆதிநாதர் ஆலயம். ஆலயத்தினுள் பிரகாரப் பகுதியில் முதலில் பார்சுவநாதர் முன்னே இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  உள்ளே கருவரை பகுதியில் ஆதிநாதர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.   Read More →

Friday, May 29, 2015 Posted by Dr.Subashini     வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயங்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், இருபது கால் மண்டபம், கலசார்ச்சன மண்டபம், கோபுரம், மானஸ்தம்பம், மடப்பள்ளி ஆகிய பகுதிகளைக் கொண்டு  கோயில் விளங்குகின்றது. இதன் நடுவே ஆதிநாதர் பரியங்காசனத்தில்Read More →

Saturday, June 13, 2015 Posted by Dr.Subashini     வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. திருமலை திருமலை ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமடத்தின் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய பிரத்தியேகமான பேட்டி இது. தமிழகத்தில் தற்காலச் சூழலில் தமிழ்ச் சமணம் அருகி வருகின்றது.   இன்று  தமிழகத்தில் இருப்பவை இரண்டு மடங்களே. பழமை வாய்ந்தRead More →

Saturday, June 20, 2015 Posted by Dr.Subashini   வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.   சக்கரேஸ்வரி ​ திருமலை ஜைனமடத்தில் 2006ம் ஆண்டு பஞ்சகுல தேவதைகளுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இது ஸ்ரீகேந்திர அரிஹந்தகிரி ஜைனமட மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீதவளகீர்த்தி பட்டாரக சுவாமிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு ஜினாலயம். சமண மதத்தில் சாசன தேவதைகளுக்கு ஆலயங்களும், சிற்பங்களும் அதற்கான வழிபாட்டுRead More →

Saturday, July 04, 2015 Posted by Dr.Subashini     வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும்  மலையை திருமலை என்றும் அழைப்பர். மலையின் மேற்கே படிகளில் ஏறிச்சென்றால் நாம் ஸ்ரீசிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம். இச்சிலையின் மொத்த உயரம் 16 1/2 அடியாகும். பகவான் நேமிநாதரின் சிறப்புப்Read More →

Saturday, August 08, 2015 Posted by Dr.Subashini    வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும்  மலையை திருமலை என்றும் அழைப்பர். திருமலை சமண மடம் அம்மைந்திருக்கும் மலைப் பகுதியில் தீர்த்தங்கரர்களின் தனிக் கோயில்களும் கல்வெட்டுக்களும் சின்னங்களும் பற்பல அமைந்திருக்கின்றன. சிகாமணி நாதர் கோயிலை அடுத்து மேலே தொடர்ந்து நடந்துRead More →

Saturday, September 19, 2015 Posted by Dr.Subashini   வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. குந்தவை ஜினாலயம் என்பது இராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் கட்டியதாக அறிகின்றோம். இது கி.பி.11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ​ ​ கருவறைக்கு அடுத்தார் போலக் காணும் தூண்கள் மட்டுமே சோழர்காலத் தூண்கள். ஏனைய தூண்கள் ஏனைய கட்டுமானப்Read More →

Thursday, October 08, 2015 Posted by Dr.Subashini    வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின் தலைமை ஊராக இருந்து வருகின்றது. இங்குள்ள சமண மடம் ஜினகாஞ்சி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் பழைய சமணப்பள்ளிகளும் கோயில்களும் உள்ளன. பகவான் பார்சுவநாதர் இக்கோயிலின் மூலவர்.  மடத்தோடு இணைந்தவடிவில் அதன் பக்கவாட்டில்Read More →

சமண சமயம் புகழ் பெற்று விளங்கிய நகரங்களில் கோவை மாவட்டமும் சிறப்பிடம் பெறுகின்றது. கோவையில் பெறுந்துறை நகருக்கு அருகில் உள்ள விஜயமங்கலத்தில் எட்டாவது சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர் புலவர் ராசு அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஜனவரி 2012ம் ஆண்டு சென்றிருந்த போது செய்யப்பட்ட பதிவுகள் மண்ணின் குரல் வெளியீடுகளாகப் பதிப்பிக்கப்படுகின்றன. இந்தப் பதிவுகள் புகைப்படங்களாகவும்,Read More →