ரமணாஸ்ரமம்

ரமணாஸ்ரமம்

 

திருவண்ணாமலை செல்லும் வழியில் கிரிவலம் செல்லும் வழியில் முதலில் வருவது ஸ்ரீரமணாஸ்ரமம். எங்களின் இரண்டாம் நாள் பயணத்தில் இந்த இடத்திற்குச் செல்வதாக எங்கள் பயணத்திட்டம் அமைந்திருந்தது. காலையில் நான் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்று வந்தவுடன் தயாராக இருந்த சீத்தாம்மா, திருமதி புனிதவதி, ப்ரகாஷ் நால்வரும் ரமணாஸ்ரமம் செல்ல புறப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதியிலிருந்து பக்கத்திலேயே ஆசிரமம் என்பதால் குறுகிய நேரத்தில் ஆசிரமத்தை அடைந்தோம். நுழைவாயிலில் வருவோரை வரவேற்கும் வளைவு. இந்த வளைவினைக் கடந்து உள்ளே செல்லும் போது ஆங்காங்கே பெரிய மரங்கள். சிறிய சோலையாக ஆசிரமம் காட்சியளிக்கின்றது.

 

புதிய மண்டபம்

பளிங்குக் கற்களின் குளிர்ச்சியைப் பாதத்தில் உணர்ந்தவாறு மண்டபத்தில் நுழைந்து நடக்கும் போது அந்த அமைதியான சூழல் மனதிற்கு அமைதி தருவதாக அமைந்திருந்தது. சிலர் அமைதியாக தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். நிசப்தமான சூழல். தியானத்திற்கு மிக ஏற்ற சூழல். உள்ளே ரமணரின் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் ரமண மகரிஷியின் சமாதி. சமாதியின் மேல் லிங்கம் பிரத்ஷ்டை செய்யப்பட்டுளளது.

 

 

 

 

இந்த லிங்கத்திற்கு ஆரத்தி செய்வதைக் காட்டும் விழியம் இங்கே:
நன்றி: யூடியூப்
{youtubejw}bBQmHgKIsMM{/youtubejw}

 

மாத்ருபுத்தேஸ்வரர் ஆலயம்

இந்த மண்டபத்தின் உள்ளிருந்து செல்லும் போது மேற்குப் பகுதியினுள் நுழைந்து சென்றால் மாத்ருபுத்தேஸ்வரர் ஆலயத்திற்குள் வரலாம். இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயம் பிரபல திரு.வைத்யநாத ஸ்தபதி அவர்களின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முழு பௌர்ணமியன்றும் ஸ்ரீ சக்ர பூஜை நடைபெறுகின்றது.

 

ஆலயத்தைத் தாண்டி வரும் போது தென்படுவது மேலும் ஒரு மண்டபம். இதில்  கரிய பளிங்குக் கல்லில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரமண மகரிஷியின் ஒரு முழு உருவச் சிலையைக் காணலாம். இது ஒரு முழு கல்லிலிருந்து செதுக்கி வடிக்கப்பட்ட சிலை. மிகத் தரூபமாக வடிவமைக்கப்பட்டு அமைந்துள்ளது இந்தச் சிலை.

 

 

ரமண மகரிஷியின் வரலாற்றை விளக்கும் விழியம். (1மணி நேரம் 13 நிமிடங்கள்)
நன்றி:யூடியூப் (ludosophicus) 

{youtubejw}KgmBBtwTz_g{/youtubejw}

Bhagawan Ramana Maharishi Rare LIFE Photos
நன்றி: SuryaVision

{youtubejw}-RLw2QdbiAU{/youtubejw}

 

ரமணாஸ்ரமத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் பார்க்க: http://www.sriramanamaharshi.org/ramanasramam.html

 

மேலும் படங்கள்:

 

பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குகின்றனர்


படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *