35. முத்துசாமி தீட்சிதர்       முத்துசாமி தீட்சிதருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் எட்டயபுர ஜமீன் வம்சத்தினருக்கு இருந்திருக்கின்றது. அவர் தான் வாழ்ந்த காலத்திலேயே எட்டயபுர சமஸ்தானத்தின் இசை மேதையாக கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.  பின்னர் இவருக்கு நினைவு மண்டபம் எட்டயபுர நகரின் முக்கிய வீதியிலேயே எழுப்பப்பட வேண்டும் என்ற சிந்தனை தோன்றியதும்  அதனை செயல்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். 1946ம் ஆண்டு ஏப்ரம் மாதம் 7ம் தேதிRead More →

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் மூன்றவாது மரபுநடை( 25/11/2018) தொல்லோவியங்களால் சிறப்பு பெற்ற 5000 ஆண்டுகளுக்கு முந்தைய விழுப்புரம் மாவட்டம் செத்தவரை, கீழ்வாலை, பனைமனை தாளகிரிஸ்வரர் கோயிலுக்கு மரபு நடைப்பயணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 60 பேர் கலந்து கொண்ட இந்த மரபு நடைப்பயணம் பேராசிரியர் பன்னீர்செல்வம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த காலை சிற்றுண்டியுடன், சிறப்பு அழைப்பாளர்கள் ஓவியர் சந்திரு அவர்களின் அறிமுகவுரையுடன் செத்தவரை ஓவியங்களைக்காண சென்றோம்.Read More →

Nov 21, 2010    35. உமறுப் புலவர் மணிமண்டபம்   கடந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடுகளில் உமறுப் புலவர் சரிதை என்ற ஒரு நூலும் இடம் பெற்றது. இது நமது சேகரத்தில் 148வது நூலாக உள்ளது. செய்யுளும் உரைநடையுமாக அமைந்த இந்த நூலை தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கத்திற்காக வழங்கியிருந்தார் திருமதி.சீதாலக்ஷ்மி அவர்கள். தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்ற போது அவர் தமது வாசிப்புக்காக எடுத்துச் சென்றRead More →

ஒலிப்பதிவும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாள்: 28-06-2010     தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்   தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டிகள்  இப்பகுதியில் இடம் பெறுகின்றன.     முனைவர் பத்மாவதி     பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/pathma1.mp3{/play} அறிமுகம் – இப்பகுதியில் தனது தற்போதைய பணிகள் பற்றி விளக்குகின்றார். அத்துடன் தான் தற்போது பிரத்தியேகமாகRead More →

பாயும் சரஸ்வதிக் கரையினிலே   அறிமுகம் டாக்டர் திரு கல்யாணராமன் ஏஷியன் டெவலப்மண்ட் வங்கியில் பெரும் பொறுப்பு வாய்ந்த பதவி வகித்தவர். ரெயில்வேயில் கம்யூட்டராக்கம் சம்பந்தமாக முக்கியப் பணிகள் ஆற்றியவர். கன்னடம், தெலுங்கு, தமிழ், சம்ஸ்க்ருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நன்கு தெரிந்தவர். 1939 ஆம் ஆண்டு தஞ்சை மண்ணில் பிறந்தவர், 1958 – 1961 ஏ ஜி எஸ் அலுவலகம், 1965ல் ரெயில்வேயில் கம்ப்யூடராக்கம், 1978 வரை கர்நாடகாRead More →

தமிழ் மொழியில் இன்று கிடைக்கக்கூடிய இலக்கிய, இலக்கண, மருத்துவ, கலை நூல்கள் அனைத்தும் தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்து அவற்றை பதிப்பித்த சான்றோர்களின் சேவையினால் நமக்கு கிடைத்தவை. இவ்வகையில் பனை ஓலைச் சுவடிகளைத் தேடி, அதனை வாசித்து, வெவ்வேறு படிகளைச்  சோதித்து அவற்றை அச்சுப் பதிப்பிற்கு கொண்டு வந்த பெரியோர்களை நாம் அறிந்திருப்பது மிக அவசியம்.  சுவடியியல் அறிஞர் முனைவர்.மாதவனின் சுவடிப்பதிப்பியல் எனும் நூல் ஒரு பட்டியலை வழங்கியுள்ளது.Read More →

18-Nov-2010   34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள்   அரண்மனை முழுதையும் நாங்கள் சுற்றிப் பார்த்து முடிக்க ஏறக்குறைய இரண்டரை மணி நேரங்கள் தேவைப்பட்டது. எல்லா பகுதிகளையும் பார்த்து அப்பகுதிகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அந்த பகுதிகளின் சிறப்புக்களைத் திரு.கருணாகர பாண்டியன் மற்றும்  அரண்மனை மேலாளர் வழி தெரிந்து கொண்டேன். சில அறைகள் பூட்டப்பட்டே இருக்கின்றன. அப்பகுதிகளுக்குள் நாங்கள் செல்லவில்லை.   அரண்மனையின் அழகு அன்றைய காலைRead More →

02-Nov-2010   33. ஜெஜ்ஜை மாளிகை   எட்டயபுர அரண்மைனையின் அழகை சிறப்பு செய்வதாக அமைந்திருப்பது இந்த அரண்மையில் இணைத்து கட்டபட்டிருக்கும் ஜெஜ்ஜை மாளிகைப் பகுதி.   மிக அழகிய வேலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டிருக்கும் மாளிகையின் ஒரு பகுதி இது. கோபுரங்கள் போன்ற அமைப்பு, விரிந்த மொட்டை மாடி அந்த மாடிக்குச் செல்லும் அழகான வளைந்த வடிவிலான படிக்கட்டு எல்லாம் மிக உறுதியாக கட்டப்பட்டுள்ளன. மாளிகையின் மேலிருந்து பார்க்கும் போது எட்டயபுரRead More →

01-Nov-2010   32. முடிசூட்டு விழா      Etaiyapuram Past and Present  நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் பிஷப் கார்ட்வெல் (R. Caldwell, Bischop – Author of the History of Tinnevelly) 18th July 1889 என்று தேதியிடப்பட்ட  இம்முன்னுரையில் இந்த நூலினை முக்கிய சரித்திரச் சான்றாகத் தான் கருதுவதாகக் குறிப்பிடுகின்றார்.    அத்தோடு பாஞ்சாலங்குறிச்சி போரில் எட்டயபுர ஜமீன்தாரின் துணை உதவியதையும் இப்பகுதியில் இப்படி குறிப்பிடுகின்றார். "TheRead More →