10-10-2010 29.அரண்மனை பொக்கிஷங்கள்   வரலாற்றுச் சான்றுகளே சரியான சரித்திர உண்மைகளை அறிந்து கொள்ள உதவுபவை. அவ்வகைச் சான்றுகள் இல்லாத நிலையில் ஒரு சமூகத்தின் பாரம்பரிய உண்மைகளையும் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்வதில் பெறும் சிரமம் ஏற்படும். தெளிவற்ற தகவல்கள் ஆய்விற்கும் உதவாதவை. சான்றுகளாக குறிக்கப்படும் பல்தரப்பட்ட ஆவனங்கள் முறையாகப் பாதுகாக்கப்படும் போதே அவை ஆய்விற்கு உதவுவனனவாக அமைகின்றன. அந்த வகையில் இன்றைய தமிழகத்தில் முன்னர் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அரசர்களின் காலத்தை, ஆட்சியின் போது நடந்த நிகழ்வுகளை அறிய  முற்படும் போது முறையான ஆவணங்கள் கிடைப்பத்தில் பெறும் சிரமம் இருக்கவே உள்ளது.     வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத நிலையில் முக்கிய ஆவணங்களாக இன்று நாம் கருதும் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுவர்Read More →

28. எட்டயபுர அரச வம்சம் – 2     எட்டயபுர மன்னர்களைப் பற்றிய பட்டியலின் தொடர்ச்சியை, அவர்களைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க செய்திகளை இந்தப் பகுதியில் மேலும் தொடர்கிறேன். 21வது பட்டம் பெயர்: ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர் அய்யன் இவர் 20வது பட்டமாகிய ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யனின் மகன். ஆட்சி செய்த காலம்: 11 ஆண்டுகள். 22வது பட்டம் பெயர்: ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர்Read More →

03-10-2010   27. எட்டயபுர அரச வம்சம் – 1 பாஞ்சாலங்குறிச்சி போர், அதன் சமயம் வீரபாண்டிய கட்டபொம்மனின் நிலை ஆகியவற்றைப் பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். எட்டயபுர மன்னர்களின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வதும் இந்தக் கட்டுரை தொடருக்கு அவசியமாகப் படுவதால் அதனைப் பற்றிய குறிப்புக்களையும் இங்கு வழங்க வேண்டியது அவசியமாகின்றது.   இந்த அரச பரம்பரையினரின் வம்சத்தைப் பற்றிய குறிப்புக்களை வழங்கும் நூலாக இருக்கின்ற வம்சமணி தீபீகைRead More →

26. வழங்கப்பட்ட தண்டனையும் பிற நிகழ்வுகளும்     வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்து கயத்தாறுவிற்குக் கொண்டு வந்து விடுகின்றனர். அங்கே தான் விசாரனை நடக்கின்றது. இந்த விசாரனை நடக்கும் போது ஏனைய பாளையக்காரர்களும் அங்கு வந்திருக்கின்றனர். இதனை Etaiyapuram Past and Present  இப்படி பதிகின்றது. "Cataboma Nayakar, and six of his companions in adversity and sharers in his iniquity, were brought downRead More →

25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு – 2   வம்சமணிதீபிகை நூலின் சில பகுதிகள் மேலும் இப்பகுதியில் தொடர்கின்றன.   "கட்டபொம்மு நாயக்கர் அவர் சகோதரர் ஊமைக்குமாரசாமி நாயக்கர் மந்திரி சிவசுப்பிரமணியபிள்ளை இவர்களுடைய துற்போதனையினாலே சிவசுப்பிரமணிய பிள்ளை மகன் கலியாணச் சிலவுக்காக திருநெல்வேலியில் கும்பியனியாருடைய களஞ்சியத்துக்குக் காவலாயிருந்த சங்குத் தேவனைக் கொன்று களஞ்சியத்திலிருந்து 1500 கோட்டை நெல்லையும் கொள்ளையிட்டதுமில்லாமல், தூத்துக்குடியிற் பிற்கட்டு மேஜர் துரையவர்கள் களஞ்சியத்து நெல்லையும் கொள்ளையிட்டார்.  Read More →

19-09-2010   24.பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு எட்டயபுரத்தில் அதன் 31வது பட்டம் ஜெகவீரராம எட்டப்ப நாயக்கர் அய்யனவர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளையில் எட்டயபுரத்துக்குத் தென்திசையில் சுமார் 15மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஒட்டப்பிடாரம் கிராமத்திற்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் பாஞ்சாலங்க்குறிச்சி நகரத்தை வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆண்டுகொண்டிருக்கின்றார். இவரைப் பற்றி 1879ம் ஆண்டு வெளியிடப்பட்ட வம்சமணி தீபிகை நூல் கூறும் சில விஷயங்களை இந்தப் பகுதியில் காணலாம்.   பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கொத்தளங்களுடன்Read More →

யாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ள விளையாட்டுக்களில் சில. பதிவு செய்து வழங்கியவர்: திருமிகு.வலன்ரீனா இளங்கோவன் (யாழ்ப்பாணம்) நீர் நிறைத்தல்   யானைக்குக் கண் வைத்தல்   போழை  அல்லது மாபிள் அடித்தல்   ஓப்பு விளையாட்டுRead More →

முனைவர் ச. கண்மணி கணேசன் ஓய்வுபெற்ற முதல்வர், காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி, தமிழ்நாடு   இது ஒரு குழு விளையாட்டின் போது பாடப்படும் பாட்டு. பாட்டில் ஏதோ குறிப்புப் பொருள் உள்ளது என்று இப்போது புரிகிறது. ஆனாலும் தெளிவாகத் தெரியவில்லை. சிறு வயதில் பொருள் புரியாமலேயே இதை பாடிக்கொண்டு விளையாடுவதுண்டு. எத்தனைபேர் வேண்டுமானாலும் சேரலாம். 1) மக்கா சுக்கா பால் பரங்கி ஆட்டுமை கூட்டுமை சீ சல் சல்லத் தூக்கி மேலRead More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 33. பூசணிக்காய் விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படும் விளையாட்டு இது. (8-13 வயது) விளையாடுகின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் ஒருவர்பின் ஒருவராகத் தரையில் அமர்ந்து கொள்கின்றனர். இவ்வரிசையில் முதலில் அமர்ந்திருப்பவர் பாட்டி என்றழைக்கப்படுகிறார். தனியாக நிற்கும் இருவரில் ஒருவர் ராசாவாகவும் மற்றவர் சேவகனாகவும் கூறப்படுகின்றனர். ஒருவர் நாயாகவும் உட்கார்ந்திருப்பவர்களினருகில் இருக்கிறார். விளையாடுவதற்கு முன்னாலேயே பாட்டி, ராசா, நாய், சேவகனாகRead More →

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு] 32. தில்லாக்கு விளையாட்டு இது சிறுமியர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டாகும். இதில் இரண்டுவகை காணப்படுகிறது. தனித்தனியாக விளையாடுவது, சோடியாக விளையாடுவது என இருவகை. இவ்விளையாட்டை தனியாக விளையாடினால் இரண்டு முதல் நான்கு நபர்களுக்கு மேல் விளையாடுவதில்லை. சோடியாக விளையாடினால் எட்டு நபர்களுக்கு மேல் விளையாடப்படுவதில்லை. அ. தனிநபர் ஆட்டம் ஆரம்பம் முடிவு மேலே படத்தில் காட்டியதுபோல் (ஆரம்பம்)Read More →