சூலூர் திரு.சிவக்குமாரின் (நிறுவனர், தமிழாய்வு அறக்கட்டளை) மாணவர்கள் செய்து காட்டும் தமிழர் வீர விளையாட்டுக்கள்   சிலம்பம் – வணக்கம் செலுத்தும் முறை   சிலம்பத்தில் இரட்டை கம்பு நெஞ்சு மற்றும் பின் உருளி. இது உடலை ஒற்றி சுற்றக்கூடியது. உடல் இந்தப் பயிற்சியினால் நல்ல வளைவு தன்மை அடையும்.   எப்பேற்பட்ட பிடியில் இருந்தும் பிடிபடாமல் விலக இப்பயிற்சி உதவும்    Read More →

10-10-2010 29.அரண்மனை பொக்கிஷங்கள்   வரலாற்றுச் சான்றுகளே சரியான சரித்திர உண்மைகளை அறிந்து கொள்ள உதவுபவை. அவ்வகைச் சான்றுகள் இல்லாத நிலையில் ஒரு சமூகத்தின் பாரம்பரிய உண்மைகளையும் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்வதில் பெறும் சிரமம் ஏற்படும். தெளிவற்ற தகவல்கள் ஆய்விற்கும் உதவாதவை. சான்றுகளாக குறிக்கப்படும் பல்தரப்பட்ட ஆவனங்கள் முறையாகப் பாதுகாக்கப்படும் போதே அவை ஆய்விற்கு உதவுவனனவாக அமைகின்றன. அந்த வகையில் இன்றைய தமிழகத்தில் முன்னர் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அரசர்களின் காலத்தை, ஆட்சியின் போது நடந்த நிகழ்வுகளை அறிய  முற்படும் போது முறையான ஆவணங்கள் கிடைப்பத்தில் பெறும் சிரமம் இருக்கவே உள்ளது.     வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத நிலையில் முக்கிய ஆவணங்களாக இன்று நாம் கருதும் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், சுவர்Read More →