A. The story of India – amazing BBC documentary series part written and prodcued by Michael Wood courtecy :BBC   Part 1 of 7 {youtubejw width="600" height="420"}APn07PS-5qc{/youtubejw}   Part 2 of 7   {youtubejw width="600" height="520"}KLeOGl14lPc{/youtubejw}   Part 3 of 7   {youtubejw width="600" height="520"}hYcQwNJ8q9w{/youtubejw}   Part 4Read More →

"சித்திரக்கவி வித்தகர்" – தி.சங்குப்புலவர் பா.வள்ளிதேவி   பண்டைத் தமிழ்ப் புலவர்களின் மரபில் பிறந்தவர்.  இவரது முன்னோர்கள் இறையருளும் தமிழ் அன்னையின் ஆசியும் பெற்று வாழ்ந்தவர்கள்.  இவரது பாட்டனார் சங்குப்புலவர், "மலைசாயப் பாடிய சங்குப்புலவர்" என்று தமிழ் வரலாற்றில் புகழப்பட்டவர்.    சேத்தூரை அடுத்த தேவதானம் என்ற ஊரில்  பெற்ற நாயகி அம்மன் ஆலயம் உள்ளது. ஆலயத்தின் கல்வெட்டும், தனிப்பாடல் திரட்டு என்ற நூலில் உள்ள பாடல்களும் அப்புகழுக்குரிய சான்றாகக்Read More →

 "தமிழவேள்" உமாமகேசுவரனார் வளவ.துரையன்   பண்டைக் காலத்தில் பெருமை பெற்றுத் திகழ்ந்த வள்ளல் பெருமக்களில் "வேள்" என்னும் சிறப்பு அடைமொழி பெற்றவர் இருவராவர்.  ஒருவர், "வேள்" பாரி மற்றொருவர் "வேள்" "எவ்வி"  சங்க காலத்துக்குப் பிறகு, முதன்முதலாக "வேள்" எனும் பட்டத்தைப் பெற்றவர் தான் உமாமகேசுவரனார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான, வடவாற்றுக்கும் வெண்ணாற்றுக்கும் இடையில் உள்ள "கருந்திட்டைக்குடி" எனும் கிராமத்தில், 1883ஆம் ஆண்டு மே 7ஆம் நாள்Read More →

குறளாக வாழ்ந்தவர் திருக்குறள் வீ.முனிசாமி கோ.செங்குட்டுவன்     வானொலியில் திருக்குறள் அமுதம் பருக அதிகாலையில் நம்மை எழுப்பிய "ஏ மனிதா" என்ற முதல் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் திருக்குறளார் வீ.முனிசாமி.   விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வீராசாமி பிள்ளை – வீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.   திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதேRead More →

‘கொங்குக் குலமணி’ – சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார் புலவர் ஆதி   செந்தமிழ்ப் புலவராய் இருந்து தமிழை வளர்த்தோரைக் காட்டிலும், வேறு வேறு துறைகளில் புலமை பெற்றவரே தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாய் இருந்துள்ளனர்.  ந.மு.வேங்கடசாமி நாட்டார், உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்து பின் புலவராகப் பொலிந்தவர்  "பண்டிதமணி" கதிரேசச் செட்டியார், வணிகராய் இருந்து பின்னர் புலமை நலங்கனிந்தவர். "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரம் பிள்ளை , "நாவலர்" சோமசுந்தர பாரதியார்,  கா.சு.பிள்ளை, இரா.பி.சேதுப்பிள்ளை முதலான பெருமக்கள்,Read More →

"அருந்தமிழ்த் தொண்டர்" அரங்கசாமி நாயக்கர் முனைவர் இராம.இராமமூர்த்தி     தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர் மிகப்பலர்.அவருள் ஒரு சிலரையே இன்று நாமறிந்து போற்றி வருகிறோம்.  எஞ்சியுள்ளோரின் தமிழ்த் தொண்டும் அவர்தம் வரலாறும் வெளிப்படாமல் இருக்கின்றன. அத்தமிழ்த் தொண்டர்கள் தம் வரலாறு முழுவதுமாக வெளிப்பட்டாலன்றி, தமிழிலக்கிய வரலாறும்  முற்றுப்பெறாததாகவே அமையும். ஆதலால், தமிழன்பர்கள் தாமறிந்த தமிழ்ச் சான்றோர்களின் வரலாற்றை வெளிப்படுத்த முன்வர   வேண்டும். இதுவும் ஒருவகைத் தமிழ்த்தொண்டே.அரங்கசாமி நாயக்கர், 1884ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதிRead More →

"தேசிய சங்​க​நா​தம்" டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு பெ.சு.மணி     "தென்​னாட்​டுத் தில​க​ரா​க"ப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934இல் "தேசிய சங்​க​நா​தம்" எனும் தலைப்​பில் 32 பக்​கங்​க​ளில் டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு​வின் வாழ்க்கை வர​லாற்றை எழு​தி​னார்.​   இந்​தச் சிறு​வெ​ளி​யீட்​டில் டாக்​டர் நாயு​டு​வின் தேசி​யத் தொண்​டு​கள் 1933 வரை​யில் நிகழ்ந்​தவை மிகச் சுருக்​க​மா​கக் கூறப்​பட்​டுள்​ளன.​ ​"டாக்​டர்" எனும் பட்​டப் பெயர்,​​ அவர் சித்த வைத்​தி​யம்,​​ ஆயுர்​வேத வைத்​தி​யம் இரண்​டி​லும் தேர்ச்சி பெற்று மருத்​து​வத்Read More →

"செந்​த​மிழ்ச் செல்​வர்" வித்​து​வான் து.கண்​ணப்ப முத​லி​யார் இடைமருதூர் கி. மஞ்சுளா   த​மி​ழும்,சைவ​மும் ஒரு​சேர தழைத்​தோங்கி வள​ரச்​செய்த பெரு​மைக்​கு​ரி​ய​வர் வித்​து​வான் பாலூர் து.கண்​ணப்​பர்.​ ஆற்​றல் மிக்க எழுத்​தா​ள​ராய்,​​ பன்​மு​கத் திற​மை​யு​டன் திகழ்ந்த,​​ து.கண்​ணப்​பர்,​​ தமிழ் அன்​னைக்​குப் பல ஒளி​மிக்க அணி​க​லன்​க​ளைப் பூட்டி அழ​கு​பார்த்​த​வர்.​   செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த பாலூர் எனும் சிற்​றூ​ரில்,​​ துரை​சாமி முத​லி​யார் – மாணிக்​கம்​மாள் தம்​ப​திக்கு 1908ஆம் ஆண்டு டிசம்​பர் 14ஆம் தேதி பிறந்​தார்.​ சைவத்தைRead More →

  பேரா​சி​ரி​யர் மா. இளை​ய​பெ​ரு​மாள் முனை​வர். சு.அழ​கே​சன்   கேர​ளத்தி​லி​ருந்து தமி​ழுக்​குத் தொண்டு செய்​தோர் பலர். படைப்​பு​கள் வழி​யும்,​ ஆய்​வு​கள் வழி​யும் தமி​ழுக்​குப் பெரி​தும் பங்​காற்​றி​ய​வர்​க​ளுள் பேரா​சி​ரி​யர் மா.இளை​ய​பெ​ரு​மா​ளும் ஒரு​வர்.   நீல.பத்​ம​நா​பன், ஆ.மாத​வன் நகு​லன் என்ற படைப்​பா​ளர்​கள் வரி​சை​யி​லும்,​ பேரா​சி​ரி​யர் வையா​பு​ரிப் ​பிள்ளை பேரா.வ.அய்.சுப்​பி​ர​ம​ணி​யம் போன்ற அறி​ஞர்​கள் வரி​சை​யி​லும் வைத்து எண்​ணத்​தக்​க​வர் மா.இளை​ய​பெ​ரு​மாள்.     ஏ​றத்​தாழ 30 ஆண்​டு​கள் ​(1954 முதல் 1984 வரை)​ கேர​ளப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில்Read More →

"அபி​தான சிந்​தா​மணி" புகழ் ஆ.சிங்​கா​ர​வேலு முத​லி​யார் புல​வர் பா. அன்​ப​ரசு   தமி​ழில் "அபி​தான சிந்​தா​மணி" என்​னும் பெய​ரில் ஒரு நூல் உள்​ளது. இதைப்​பற்றி அறிந்​துள்ள தமிழ் ஆர்​வ​லர்​கள் மிகச் சிலரே. இந்நூ​லின் பெய​ரைக் கேள்​விப்​ப​டும் சிலர்,​ "அபி​தான சிந்​தா​மணி" என்று ஒரு நூல் உள்​ள​தாமே,​ அதைக் கொடுங்​கள் படித்​து​விட்​டுத் தரு​கி​றேன் என்று கேட்​கி​றார்​கள்.   சீவக சிந்​தா​மணி, விவேக சிந்​தா​மணி என்​பது போல,​ அபி​தான சிந்​தா​மணி எளி​தில் படிக்​கக்Read More →