தமிழ்மணி – அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார் சேதுபதி   "அடிகளார்" என்பது துறவியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல். எனினும், அப்பெயர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருவரையே குறிக்கும் சிறப்புப் பெயரானது தனி வரலாறு.        தமிழகத்துத் தஞ்சைத் தரணியில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை – சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு, 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதிRead More →

  தமிழ்மணி – வள்ளல் கா.நமச்சிவாயர் பேரா.ஆ.திருஆரூரன்   புலவர்கள் என்றாலே பிறரை வாழ்த்திப்பாடி வயிறு வளர்ப்பவர்கள்; வறுமையில் வாடுபவர்கள் என்ற எண்ணம் நம் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வருகிறது. ஆனால், சிறந்த புலவராக விளங்கியதோடு தம்மைப் போன்ற புலவர்களையும் பிறரையும் வாழவைக்கும் வள்ளலாகவும் விளங்கியவர் பேராசிரியர் கா.நமச்சிவாயம்.     வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில், 1876ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி, இராமசாமி முதலியார்Read More →

  தமிழ்மணி – தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர் பெ.சு.மணி   வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர் எனும் பெயரின் சுருக்கமான வ.வே.சு.ஐயர், கரூர் அருகில் உள்ள சின்னாளப்பட்டி என்ற கிராமத்தில் 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி, வேங்கடேச ஐயர் – காமாட்சி தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.    ஐயரின் தொடக்கக் கல்வி முதல் பட்டப் படிப்பு வரையில் திருச்சிராப்பள்ளியில் நிகழ்ந்தது. 1895இல் "மெட்ரிகுலேஷன்" தேர்வில், மாநிலத்தில்Read More →

  தமிழ்மணி – "அருள்மொழி அரசு" திருமுருக கிருபானந்த வாரியார் வித்துவான் பெ.கு.பொன்னம்பலநாதன்   "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி அவதரித்தார். செங்குந்த வீர சைவ மரபினர்.         தந்தை சிவத்திரு மல்லையதாசர்; இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராணRead More →

இப்பகுதியில் சில நலுங்குப் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல்கள் பகுதியில் பதிப்பிக்கபப்ட்டது.  இதனை தட்டச்சு செய்தளித்தவர் திரு.குமரன் மல்லி அவர்கள் kumaran.malli@gmail.com.  இந்த மின்னூலைக் காண http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html பகுதியில் எண் 147 காணவும்.   கடவுள் துணை நலுங்குபாட்டு வெண்செந்துறை துதி.   சித்திரமான நலுங்கைசிறப்பாக யானுரைக்கப் பத்தியும் மிகத்தருவாய் பாலதொந்திக் கணபதியே. தங்கமே இந்தநிலமே சாமி சுந்தராபுரி செல்வமே மதுராபுரி வீதியிலே சாமிRead More →