"தமிழ் ஞாயிறு"  முனைவர் நிர்மலா மோகன்   ‘பூங்குன்றம்’ என்னும் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் இரண்டுபேர். ஒருவர், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிய சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனார். மற்றொருவர், "பண்டிதமணி" என்று அனைவராலும் போற்றப்படும் மகாமகோபாத்தியாய, முதுபெரும் புலவர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார். ஏழு மாதம் கூடப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயிலாமல், பன்னிரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகRead More →

மறைக்கப்பட்ட மாமனிதர் பா.வே. மாணிக்க நாயக்கர்! புலவர் பா.அன்பரசு   1871-1931 ஆகிய இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பொறியியல் அறிஞராகவும்,தமிழறிஞராகவும் பா.வே.மாணிக்க நாயக்கரைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆங்கில மொழிப்பற்றும் தமிழுணர்வு இன்மையும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மாணிக்க நாயக்கரை நினைத்துப் பார்ப்பது தேவையான ஒன்றாகும். மாணிக்க நாயக்கர் சேலம், பாகல்பட்டி என்னும் சிற்றூரில் பெற்றோர் வேங்கடசாமி நாயக்கர் – முத்தம்மையார் தம்பதிக்குப் பிறந்தார். சென்னை கிண்டிRead More →

முனைவர் மே.து.ராசுகுமார் கலை, இலக்கியம், கல்வெட்டு, கட்டடம், சிற்பம், ஓவியம், நுண்கலை என்று பரந்து கிடக்கும் நமது செல்வங்கள் தமிழ் மக்களது பண்பாட்டு வாழ்க்கையின் வளர்ச்சியை, உயர்வைப் பறைசாற்றுகின்றன. இவற்றின் வாயிலாக, நமது வரலாற்று, பண்பாட்டு மரபுகளை உணர்ந்து, வாழ்க்கை நெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எனவேதான், வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாகிறது. தன் இனத்தின் வரலாற்றை மட்டுமல்லாது, மனித வாழ்க்கையின் முழுமையான வரலாற்றைத் தெரிந்துRead More →

"இராவ்சாகேப்" மு.இராகவையங்காரின் செந்தமிழ்ப்பணி ம.சா.அறிவுடைநம்பி  இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் மு.இராகவையங்காரும் ஒருவர். தமிழறிஞராக, இலக்கிய ஆசிரியராக, கவிஞராக விளங்கிய பெருமை இவருக்கு உண்டு. பாண்டித்துரைத் தேவர்களால் 1902 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "செந்தமிழ்" இதழின் பதிப்பாசிரியராக 1906 ஆம் ஆண்டு முதல் 1910 ஆம் ஆண்டு வரை இருந்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளார்.   மு.இராகவையங்கார் (1878 – 1960) தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகவும், மதுரைத்Read More →

பழந்தமிழரும், கூத்துக்கலையும்! இல. கணபதிமுருகன் தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான அகத்தியம், செயிற்றியம், சயந்தம், குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே “கூத்து” எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தைRead More →

 தமிழ் வளர்ச்சியின் முன்னோடி அமைப்புகள் பெ.சு.மணி பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மூன்று அமைப்புகள் தோன்றின. இந்த அமைப்புகள், தமிழ் ஞானத்தோடும், ஆங்கில மொழியறிவையும் இணைத்த தமிழறிஞர்களால் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அமைப்புகள் வருமாறு: உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபை, தென்னாட்டு தமிழ்ச் சங்கம், திராவிட பாஷா சங்கம். உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபை – 1883: சாதாரண தமிழ்Read More →