Home HistoryEtayapuram 15 – ஒட்டப்பிடாரம்

15 – ஒட்டப்பிடாரம்

by Dr.K.Subashini
0 comment

June 04, 2010

 

வ. உ.சிதம்பரனாரின் இலக்கிய சமுதாயப் பணிகள்
 
கடந்த நூற்றாண்டில் தமிழ்கத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காகவும், சிந்தனை புரட்சிக்காவும், சமுதாய நலனுக்காகவும் உழைத்தவர்களில் வ. உ.சிதம்பரனார்  மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். சிறை தண்டனை பெற்று சிறையில் மிகவும் உடல் வருத்தும் கடுமையான தண்டனைகளைப் பெற்றவர்; மாடுகள் இழுக்கும் செக்கை இழுக்கும் தண்டணையைப் பெற்று மிகவும் துன்புறுத்தப் பட்ட அவரை ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும் சிறப்பித்து அழைக்கின்றோம். 
 
இந்தியாவில் ஆங்கிலேயர்களின்  ஆட்சியை எதிர்த்தவர்கள் கையாண்ட யுக்திகள் பலவிதம். இதில் வ. உ.சிதம்பரனாரின் உத்திகளில் பொருளாதார அடிப்படையில் மக்கள் சுயமாக முன்னேறவும் ஆங்கிலேயர்களை அண்டி இல்லாமல் இயங்கவும் மேற்கொண்டதை இன்றும் நாம் போற்றுகின்றோம்.  வணிக குடும்பத்தில் பிறந்து வக்கீலாக கல்வி தகுதி பெற்று தொழில் செய்த போதிலும் வணிகத்திலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
 
 
தமிழர்களின் சரித்திரத்தில் கடந்த நூற்றாண்டில் வணிகக் கப்பல் விட்டு சரித்திரம் படைத்தவர் இவர். இதனால் இவர் கப்பலோட்டிய தமிழன் என்றும் சிறப்பாக அறியப்படுகின்றார். பெறும் செல்வந்தராக இருந்த போதிலும் மக்கள் நலனுக்காவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் மக்களோடு இணைந்து போராடி அவர்களுக்குச் சிந்தனை எழுச்சி ஊட்டியவர் இவர்.  
 
அப்போதிருந்த ஆங்கிலேய அரசு இவர் மேல் பழி சுமத்தி இவரை சிறைக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாது அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். 
 
 
 
 
இவரது சமூகப் பணி இந்திய அரசியலின் சுதந்திர நோக்கத்தோடு நின்று விடவிலலலை.  இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டவர் வ. உ.சி அவர்கள்.   ஒரு படைப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், மொழிபெயர்ப்பாசிரியராகவும், கவிஞராகவும் இவர் திகழ்ந்திருக்கின்றார். இவர் எழுதிய நூல்களின் பட்டியல் இங்கே:
 
  • மெய்யறிவு
  • மெய்யறம்
  • எனது பாடல் திரட்டு
  • வ. உ.வி.கண்ட பாரதி
  • சுயசரிதை
 
இவர் மொழி பெயர்ப்பு செய்த நூல்களின் பட்டியல்:
  • மனம் போல வாழ்வு
  • அகமே புறம்
  • வலிமைக்கு மார்க்கம்
  • சாந்திக்கு மார்க்கம்
 
இவர் உரை எழுதியவையாக குறிப்பிடப்படும் நூல்களின் பட்டியல்:
  • சிவ ஞான் போதம்
  • இன்னிலை
  • திருக்குறள்
 
இவரது முயற்சியில் இவரால் பனை ஓலை சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பட்டியல்:
  • தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் (இளம்பூரனார் உரை)
  • தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (இளம்பூரனார் உரை)
  • சிவ ஞான் போதம்
 
இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். அவற்றின் பட்டியல்:
  • விவேக பாநு
  • தமிழ் நேஷனல்
  • பத்திரிகை
  • இந்து நேசன்
 
சைவ சித்தாந்த சபையில் முக்கியமான அங்கம் வகித்தும் சைவ சித்தாந்த தத்துவங்களில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்திருக்கின்றார்.  சிவஞானபோத உரை எழுதுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் அவர் பல சைவ  சித்தாந்தம் தொடர்பான உரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளார்.   1934-35களில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சிவஞானபோத உரையின் முதல் வடிவை எழுதியிருக்கின்றார். பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
 
 
 
இவரது சொற்பொழிவுகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு ‘எனது அரசியல் பெருஞ்செயல்’  என்ற தலைப்பில்  அச்சு வடிவம் கண்டுள்ளது.  இது அவரது அரசியல் அனுபவங்களை எடுத்துக் காட்டும் சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படுகின்றது.
 
 
வ. உ.சிதம்பரனாருக்கு ஏழு குழந்தைகள். அவர்கள்:
  1. மரகத வல்லி
  2. ஆனந்த வல்லி
  3. வேத வலி
  4. ஞானம்மாள்
  5. ஆறுமுகம்
  6. சுப்பிரமணியம்
  7. வாலேஸ்வரன்
 
இந்திய அரசு வ. உ.சிதம்பரனாரின் தேசியப் பற்றினை மதித்து அவரது பெயரில் தபால் தலையையும் வெளியிட்டு அவரை பெறுமை படுத்தியுள்ளது.
 
 
 
 
இந்த நினைவு மண்டபத்திலேயே அவரது மறைவுக்குப் பின் அவருக்கு நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உள்ளது. அவரது அனைத்து சேவைகளையும் தெரிந்து அவரது இல்லத்திலேயே இருந்து உணர்ந்து   இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது மனம் கலக்கம் கொள்வதை தடுக்கமுடியவில்லை.  இந்த இறுதி யாத்திரை புகைப்படத்தில் இவரது மகன்கள் வ.உ.சி. ஆறுமுகம், வ.உ.சி. சுப்பிரமணியம், வ.உ.சி. வாலேஸ்வரன்  ஆகியோர் இருப்பதாக இப்படத்தோடு உள்ள குறிப்பில் உள்ளது. இவர்களோடு இவரது நண்பர்கள் பெ.கந்தசாமி பிள்ளை, மாசிலாமணிப்பிள்ளை, பாபா ஜான் ஆகியோரும் இருப்பதாகவும் இந்தக் குறிப்பில் உள்ளது.
 
 
 
 
வ.உ.சி. அவர்களின் வாரிசுகளைப் பற்றிய  சில தகவல்களை நாம் அவ்வப்போது தமிழக பத்திரிகைகளில் பார்க்கின்றோம்.  இச்செய்திகள் தொடர்பாக மின் தமிழில் வெளிவந்த சில  செய்திகளைக் காணாலாம்.
 
வ. உ .சி அவர்களைப் பற்றிய தகவல்களை இணையத்திலும் சில வலைப்பூக்களில் காணலாம். குறிப்பாக:
 
வ. உ .சி பற்றி மின் தமிழ்ல் நண்பர்கள் சிலர் பகிர்ந்து கொண்ட தகவல்கல் சில உள்ளன. குறிப்பாக: http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/64c8244df909debe
 
சிறையிலிருந்து திரும்பிய பின்னர் தனது  இறுதி காலத்தில் வ. உ.சி அவர்கள் பொருளாதார அடிப்படியில் மிகுந்த சிரமமான நிலையில் வாழ்ந்திருக்கின்றார். அது பற்றிய கல்கியில் வெளிவந்த தகவல் ஒன்று இங்கே உள்ளது.   http://groups.google.se/group/mintamil/browse_thread/thread/b4b1b28d9c536e9f இதில் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி என்பதர் தனது தாத்தா தியாகி என்.தண்டபாணியும் வ. உ .சி அவர்களும் கூட்டாக அரிசிக்கடை வைத்து வியாபாரமும் செய்ததையும் அதில் ஏற்பட்ட நஷ்டம் பொருளாத சிக்கல் பற்றியும் குறிப்பிடுகின்றார்.
 
இலங்கையில் வெளியாகும் "வீரகேசரி" நாளிதழில் பால கங்காதர திலகரைப் பற்றி "திலக மகரிஷி" என்ற தலைப்பில் வ.உ.சி. எழுதிய கட்டுரைகள் பற்றிய செய்தி ஒன்றும் மின் தமிழில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதனை http://groups.google.az/group/mintamil/browse_thread/thread/3e8989cfb4c959da காணலாம்.
 
வ. உ.சி அவர்களின் வாழ்க்கை அவரது சமூக சேவையை விளக்கும் இரண்டு கட்டுரைகள் மரபு விக்கியில் உள்ளன. அவற்றைக் காண
 
 
அன்புடன்
சுபா

You may also like

Leave a Comment