Home HistoryEtayapuram 14 – ஒட்டப்பிடாரம்

14 – ஒட்டப்பிடாரம்

by Dr.K.Subashini
0 comment

 

வ. உ.சிதம்பரனார் பற்றி மேலும்
 
வ. உ.சிதம்பரனாரின் பிறந்த இல்லத்தை நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர். ஆனாலும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படங்களும் தகவல்களும் ஒரு நினைவு மண்டபத்தில் உள்ளது போலன்றி ஒரு கிராமப்புற பள்ளிக்கூட சுவர்களில் ஒட்டி காட்சிக்கு வைத்திருக்கும் தகவல் போலத்தான் எனக்குத் தோன்றியது.
 
வ. உ.சிதம்பரனாரின் வாழ்க்கை குறிப்புச் செய்திகள், அவரது நூல்கள் பற்றிய விபரங்கள், குடும்பப் படங்கள் என சில புகைப்படங்களும் செய்திகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதிகமான விபரங்கள் வேறு எவற்றையும் காணோம்.  இருப்பினும் இங்குள்ள சில படங்கள் மிக அரிதானவை. 
  
முதலிலே நமக்கு தென்படுவது வ. உ.சிதம்பரனாரின் இளமை காலத்து புகைப்படம் ஒன்று.  இப்படத்தில் இவர் அணிந்திருக்கும் உடையைப் பார்க்கும் போது ஓரளவு 19ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் மக்கள் அணிந்த உடைகள், தலைப்பாகை, காலணி போன்றவற்றின் தன்மைகளை ஓரளவு தெரிந்து கொள்ள முடிகின்றது.
 
 
 
 
அடுத்ததாக இருப்பது வ. உ.சிதம்பரனாரின் முதல் மனைவி வள்ளியம்மை அவர்களுடன் இவர் சேர்ந்து இருப்பதாக உள்ள படம்.  இதில் வள்ளியம்மை சேலை மட்டும் கட்டியிருக்கின்றார்.  சேலைக்கேற்ற ரவிக்கை இல்லை. கழுத்தில் இவர் அணிந்திருக்கும் அணிகலன் வித்தியாசமாக இருக்கின்றது.  அதே போல காதில் அணிந்துள்ள அணிகலன், மூக்குத்தி போன்றவையும் வித்தியாசமாகth தோற்றம் அளிப்பதாக உள்ளன.
 
 
 
 
அடுத்து இருப்பதும் இவர் வள்ளியம்மையுடன் உள்ள மற்றொரு படம். இது பிற்காலத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வருடம் பற்றிய தகவல் இல்லை. இருவரும் சற்று முதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர். இந்தப் புகைப்படத்தில் வள்ளியம்மை சேலைக்கு ரவிக்கையும் அணிந்து காட்சி தருகின்றார்.  இவர் அணிந்திருக்கும் கழுத்து, கை அணிகலன்கள் பெரிதாக வித்தியாசமாக காட்சியளிக்கின்றன.
 
 
இதற்கு அடுத்து இருப்பது மேலும் ஒரு குடும்பப் படம். இதில் வ. உ.சி அவர்கள் அவரது மனைவிடன் சேர்ந்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது இரண்டாவது மனைவியாக இருக்கலாம். முகக் குறிப்பின் அடிப்படையில் வள்ளியம்மையை விட வித்தியாசமாகத் தோன்றுகின்றார். இவரது அணிகலன்கள் பெரிதாக வித்தியாசமாக இருக்கின்றன. சேலைக்குக் கைப்பகுதி இல்லாத ரவிக்கை அணிந்திருக்கின்றார். இது அந்த காலகட்டத்தில் நாகரிகமாக இருந்திருக்கக்கூடும்.
 
 
 
 
அதற்கடுத்து இவரது நெருங்கிய நண்பர் என்று குறிப்பிடப்பட்டு பாரதியாரின் படம் வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பக்கத்தில் ஒரு உறவினருடன் வ. உ.சி அவர்கள் இருப்பதாக ஒரு படம். அதற்குப் பக்கத்தில் சுப்ரமணிய சிவா அவர்களின் படம் ஆகியவை உள்ளன.
 
 
 
வ. உ.சி எழுதி இதுவை வெளிவராத நூல்கள் என ஒரு பட்டியல் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட நூல்களின் பெயர்கள் இதோ.
 
1. சிவ மதம்
2. விஷ்ணு மதம்
3. புத்த மதம்
4. ஊழை வெல்ல உபாயம்
5. இஸ்லாம் மதம்
6. கிருஸ்து மதம்
7. மனித மதம்
8. முத்தி நெறி
9. The Universal Scripture
10. திருக்குறள்
11. திலக் மகரிஷி
  
அன்புடன்
சுபா
 

You may also like

Leave a Comment