Home HistoryEtayapuram 13 – ஒட்டப்பிடாரம்

13 – ஒட்டப்பிடாரம்

by Dr.K.Subashini
0 comment

 
வ. உ.சிதம்பரனார் பிறந்த இல்லம்

 
எட்டயபுரத்தில் நான் சந்தித்தவர்களில் மிக முக்கியமானவர் ரகுநாதன் நூல் நிலையத்தின் மேலாளர் திரு.இளசை மணியன் அவர்கள்.  அவரை நூலகத்தில் சந்தித்த வேளையில் கிடைத்தற்கு அரிதான சில நூல்களை எனக்குக் காட்டினார். அத்தோடு வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இக்கடிதத்தை இங்கே காணலாம்.    இது 30.11.1933ல் எழுதப்பட்டதாக திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.   
 
ஒட்டப்பிடாரம் சிறு நகருக்குள் வந்ததுமே எந்த சிரமமுமின்றி வ.உ.சி.அவர்கள் பிறந்த இல்லத்தை அடைந்தோம். இந்த நினைவு மண்டபத்தின் ஒரு பகுதியில் நூலகமும் இயங்கி வருகின்றது. அதற்கு "பொது நூலகம்" என்று பெயரிடப்பட்டிருக்கின்றது.
 
 
 
ஆகவே நாங்கள் சென்றிருந்த சமையத்தில் சிலர் அங்கு அமர்ந்து செய்தித்தாட்கள் நூல்கள் ஆகியவற்றை வாசித்துக் கொண்டிருந்தனர்.
 
மண்டபத்தின் வாசலிலேயே  திரு.வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய செய்தி சுவரில் பொறிக்கப்பட்டு வருபவர்களுக்கு அறிமுகமாக வைக்கப்பட்டுள்ளது. அதில் சில முக்கிய குறிப்புச் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
 
 
 
"கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்
தோற்றம்: 5.9.1872 மறைவு : 18:11.1936

 
சுதந்திரம் நம்பிறப்புரிமை என்ற தாரக மந்திரத்தை தலைமேற்தாங்கி சுதேசியப்பற்றை ஊட்டி வளர்த்த வ.உ.சி. ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார்.
 
1895ல் வாய்மைமிக்க வழக்கறிஞரானார். அன்னியராதிக்கத்துக்கு எதிராக, தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதரவாகப் போராடிச் சிறைவாசம் சென்று "செக்கிழுத்த செம்மல்" ஆனார். (1908)
 
நாவாய் செலுத்தி நாடு செழிக்க " காலியா-லாவோ"  என்ற இரண்டு கப்பல்கள் (1907) கடலில் வணிக ரீதியில் மிதக்க விட்டார்.
 
சிறைத்தண்டனையிலிருந்து (1912) விடுதலையான பின் செந்தமிழ் செழிக்க இலக்கிய நூல்களை ஏராளமாக எழுதினார்.
 
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே தன் சுயசரிதையைக் கவிதையில்  எழுதிய ஒரே தலைவர் வ.உ.சி.
 
வ.உ.சி. பிறந்த இல்லம் புதிதாக நிர்மாணிக்க 7.8.1957 அன்று முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 12.12.1961 அன்று முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது."
 
இது ஒரு இரண்டு மாடிக் கட்டிடம். இந்த மண்டபத்தின் வாசலிலேயே மற்றொரு அறிக்கையும் இணைக்கப்படுள்ளது. அதில் திருநெல்வேலியில் உள்ள வ. உ.சி. மணிமண்டபம் பற்றிய சிறு குறிப்பு உள்ளது.
 
 
 
 
 
"திருநெல்வேலியில் வ. உ.சி. மணி மண்டபம்
ரூ.80 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு  23.6.2005 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் திறந்து வைப்பட்டது "
 
என்ற செய்தி வாசலில் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.
 
 
வ. உ.சிதம்பரனார் அவர்களது வாழ்க்கைக் வரலாறு குறிப்பு ஒரு இரும்பு தகட்டில்  எழுதப்பட்டு ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள குறிப்புக்கள்:
 
 
 
1872 செப்டம்பர் 5  வியாழன்.  பிறப்பிடம்: ஒட்டப்பிடாரம்
1895 திருமணம்
1900 தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணி ஏற்பு
1908 ‘சுதேசிக் கம்பெனி’  எனும் பெயரில் கப்பல் கம்பெனி நிறுவுதல்
1907 சூரத் காங்கிரசில் புரட்சி
1908 மார்ச் 12 வ. உ.சி. கைது
1908 மார்ச் 13, நெல்லை தூத்துக்குடியில் கலகம்
1908 ஜூலை 7. வ. உ. சிக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை

 
 
அன்புடன்
சுபா

 

You may also like

Leave a Comment