Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 7

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 7

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

6. தென்னை மரம் விளையாட்டு

இருபாலரும் விளையாடுகின்ற விளையாட்டு. விளையாடும் நபர்களுக்கு எண்ணிக்கை கிடையாது.
விளையாடுகின்றவர்களனைவரும் தங்கள் இருகைகளையும் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு தென்னை மரம் போன்று நிற்கின்றனர். சிறிது இடைவெளி விட்டு அருகருகே இரண்டு நபராகச் சேர்ந்து அனைவரும் பிரிந்து நின்று கொள்கின்றனர். இவர்களைத் தவிர ஒருவர் புல்லை அறுப்பவராகவும், மற்றொருவர் தோப்பிற்குச் சொந்தக்காரராகவும் நின்று கொள்கின்றனர்.

முதலில் ஒருவர் தென்னை மரத்திற்கு அடியில் அமர்ந்து கொள்ள, தோப்புக்காரர் வந்து ‘இங்க என்ன செய்யுற’ என்று கேட்க அவரும் ‘என் மாட்டுக்கு புல்லறுக்க வந்தேன் – புல்லு வேணும் என்று கூறுகிறார். தோப்புக்காரரும் சரி தென்னை மரத்தை வெட்டாம புல்ல மட்டும் அறுத்துக்க – என்று கூறிவிட்டுச் சிறிது தள்ளி நின்று கொள்கிறார்.
புல்லை அறுப்பவர் தென்னை மரத்தையும் சேர்த்து வெட்டி விடுகிறார். உடனே தோப்புக்காரர் அவரைப் பிடித்து

தோப்புக்காரர் – ‘ஏன்யா என் மரத்த வெட்டுன’ – என்று கேட்க
புல் அறுப்பவர் – ‘தெரியாம வெட்டிட்டேன்’ – என்கிறார்
தோப்புக்காரர் – ‘எல்லாத்தையும் நிமித்தி வெச்சுட்டுத்தான் போகணும்’

– என்று கூறுகிறார்

தென்னை மரத்தை வெட்டியதாகக் கூறப்பட்டவுடன் இரண்டிரண்டு பேராக நின்று கொண்டிருந்தவர்கள் உடனே தரையில் படுத்துக் கொண்டு ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர். புல்லை அறுத்தவர் இவர்களை மிகச் சிரமப்பட்டு பிரித்து ஒருவரை மட்டும் எழுப்பி நிற்க வைத்துவிடுகின்றார். இரண்டில் ஒருவரைப் பிரித்து நிற்கையில் பிறகு அதனுடைய சோடியான மற்றொரு தென்னை மரமாகக் கிடப்பவரைத் தொட்டவுடனேயே, அவர் எழுந்து நின்று விடுகிறார். இவ்வாறு அனைத்து நபர்களையும் நிற்க வைத்தவுடன் விளையாட்டு முடிவடைகின்றது. இப்பொழுது சிறுமிகளால் மட்டுமே அதிகமாக விளையாடப்படுகிறது.

சேகரித்த இடம் – சின்ன உடைப்பு-10.7.95

[பகுதி 8 க்குச் செல்க]

You may also like

Leave a Comment