Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 26

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 26

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

26. தண்ணீர் இறைக்கும் விளையாட்டு

சிறுமிகள் மட்டும் விளையாடுகின்ற விளையாட்டு இது. எண்ணிக்கை வரம்பு இல்லை. ஆனாலும் 8 – 10 பேருக்கு மேல் விளையாடுவதில்லை. சிறுமிகள் அனைவரும் முதலில் வட்டமாக நின்று கொள்கின்னறர். முதலில் ஒருவர் தன்னுடைய வலது காலை இடது காலின் முட்டின் மேல் மடக்கி நிறுத்தி வைத்துக் கொள்கிறார்கள். அடுத்தவர் தன் காலைத் தூக்கி போடுவதற்கு இது ஒரு தாங்கி (ளவயனெ) போன்று இருக்கின்றது. பின் முதலில் நிற்பவருக்கு இடப்பக்கமாக நின்று கொண்டு இருப்பவர் தன்னுடைய வலது காலை இவருடைய மடக்கப்பட்ட வலது கால் மீது நீட்டிக்கொள்கிறார். அடுத்து ஒவ்வொருவராக விளையாடுகின்ற அனைவரும் தங்கள் கால்களை மற்றவரின் காலின் மீது நீட்டுகின்றனர். கடைசி நபர் தன் காலை நீட்டியவுடன் முதலில் நின்றவர் மடக்கி வைத்திருந்த தன் காலை எடுத்து வலப்பக்கமாக நிற்பவரின் காலின் மீது நீட்டிக்கொள்கிறார். காலை எடுக்கும் போது இவருடைய காலின் மீது கிடக்கின்ற மற்றொரு கால் எடுக்கப்படவி;ல்லை. அவ்வாறு அனைவரும் காலைத் தூக்கிப் போட்டு ஒரு வட்டத்தை உருவாக்குகின்றனர். நடுவிலுள்ள வட்டத்தைக் கிணறு என்றழைக்கின்றனர். ஒருவரின் மேல் மற்றவர் காலை நீட்டுகின்ற பொழுது கீழே விழுந்து விடாமலிருக்க அனைவரும் மற்றவர்களிpன் தோளின் மீது கைகளைப்போட்டு ஆதரவாகப் பிடித்துக்கொள்கின்றனர். வட்டத்தை உருவாக்கிய பின்னர் கைகளை எடுத்துவிட்டு தடுவிலுள்ளள கிணற்றில் தண்ணீர் இறைப்பதுபோல பாவனை செய்கின்றனர். அவ்வாறு செய்கின்றபோது

“ தண்ணீர் இறைக்க குடிக்க குசுப்போட
தந்தனக்குன தனதன தன்”

என்ற பாடலைப் பாடுகின்றனர். வேகமாக தண்ணீர் இறைப்பதுபோல பாவனை செய்கின்றனர். பத்துமுறை இப்பாடலைப் பாடுவதுடன் விளையாட்டு முடிவடைகின்றது.
சேகரித்த இடம் – தேன்கல்பட்டி

[பகுதி 27 க்குச் செல்க]

You may also like

Leave a Comment