Home Chola கீழைப்பழையாறை

கீழைப்பழையாறை

by Dr.K.Subashini
0 comment

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நூலை வாசித்தவர்களுக்குப் பழையாறை எனும் ஊரின் பெயர் நன்கு அறிமுகமான ஒன்றே! அருண்மொழித்தேவன் குந்தவை தேவியின் அன்புடனும் அரவணைப்புடன் வாழ்ந்த ஒரு ஊர். சோழ சாம்ராஜ்ஜியத்தில் சுந்தர சோழன் காலத்திலும், உத்தம சோழன் காலத்திலும், அதன் பின்னர் மாமன்னன் ராஜராஜசோழன் காலத்திலும், பின்னர் ராஜேந்திர சோழன் காலத்திலும் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய ஒரு ஊர். கோட்டையும் கோபுரங்களுமாக அரச குடும்பத்தினரின் செல்வச் செழிப்பு திகழ பெருமையுடன் இருந்த ஒரு அழகிய நகரம் பழையாறை.
இந்த நகரின் ஸ்ரீ சோமநாதசுவாமி – ஸ்ரீ சோமகமலாம்பிகை கோயிலின் பதிவே இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் பெருமை மிகு வெளியீடாக வலம் வருகின்றது.
இப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்து மிகவும் ஆதரவு நல்கிய திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மனம் நிறைந்த நன்றி.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2013/12/2014.html
யூடியூபில் இப்பதிவைக் காண:
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

சித்திரக் கூடம்
பகுதி 1

You may also like

Leave a Comment