Home Tamil MedicineHerbs கண்டங்கத்தரி- Solanum indicum Linn

கண்டங்கத்தரி- Solanum indicum Linn

by Dr.K.Subashini
0 comment

கண்டங்கத்தரி

திரு.அ.சுகுமாரன்

 

Oct 16, 2009

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு.
சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து “தசமூலம்” என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத் திரியும் ஒன்றாகும்.

 

முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிற மலர்களையும் சிறுகத்திரிக்காய் வடிவிலான காய்களையும் மஞ்சள் நிறப்பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறுசெடியின் வகை கண்டங்கத்திரி. இதன் தண்டுப் பகுதி முதல் இலைகள் வரை பூனை முட்கள் செடி முழுவதும் இருக்கும். இது கத்திரியின் வகைகளில் ஒன்றாகும். இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணமுடையவை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தரிசு நிலங்களிலும் தானே வளர்கின்றது.

கோழை அகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் பயன்படுகின்றது.
 
 மூலிகையின் பெயர் -: கண்டங்கத்திரி.
 தாவரப் பெயர் -:    Solanum indicum Linn.
தாவரக்குடும்பம் -: SOLANACEAE.

இலை,பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் முதலியன.
 

 
கண்டங்கத்திரி அனைத்து வகை நிலங்களிலும் நன்கு வளரும். முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீல நிற மலர்களையும் சிறு கத்திரிக்காய் வடிவிலான உருண்டையான காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறு செடியினம்.

பழத்தை  நெருபிலிட்டு வாயில்  புகைப் படிக்க பல் வலி, பல் அரணை தீரும்.
இது ஒரு அனுபவ வைத்தியம்.

 கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது.

ஆஸ்துமாவிற்கு இச்செடியினை பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது. காரணமில்லாத வரட்டு இருமலுக்கும் இது நல்ல மருந்து.

கீல் வாதம், மார்சளி, வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.

வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதளக்காச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.

சமூலம் 1 பிடி, ஆடாதொடை 1 பிடி, விஷ்ணுகாந்தி பற்படாகம் இரண்டும் 1 பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரைலிட்டராக்கி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் சாப்பிட புளு சுரம், நிமோனியா சுரம், மண்டை நீர் ஏற்றக் காயச்சல் முதலியன தீரும்.(கண்டங்கத்திரி குடி நீர்)கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம் அரிசிதிப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி.வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் ( ஆஸ்துமா ) என்புருக்கி ( க்ஷயம் ) ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் தீரும்.

 

‘சிறுபஞ்சமூலம் என்பது ஒரு மருந்தின் பெயர். மூலம் = வேர். சிறிய ஐந்து வேர்கள் சேர்ந்த மருந்து போல ஒவ்வொரு பாட்டிலும் ஐந்து ஐந்து கருத்துகள் உள்ளன.

கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சி வேர் என்பன அம்மூலிகைகள். இவை ஐந்தும் சேர்ந்த மருந்துக்கு இந்நூல் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒப்பாகும்.

இந்நூலின் ஆசிரியர் காரியாசான். இந்நூலிலே 97 வெண்பாக்கள் உள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடலையும், இறுதியில் உள்ள பாயிரப் பாடலையும் சேர்த்தால் 99 வெண்பாக்கள் ஆகும். 

சிறுபஞ்ச மூலத்திலே பல சிறந்த கருத்துள்ள பாடல்களைக் காணலாம். மக்களுக்கு அழகைத் தருவன இன்னின்னவை என்று இரண்டு வெண்பாக்கள் கூறுகின்றன. அவை அழகானவை. அவற்றுள் ஒன்று:

     கண்வனப்புக் கண்ணோட்டம் ; கால்வனப்புச்    செல்லாமை
     எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் –   பண்வனப்புக்
     கேட்டார்நன்று என்றல் ; கிளர்வேந்தன் தன்நாடு
     வாட்டான் நன்றுஎன்றல் வனப்பு.     (8)

கண்ணுக்குக் கண்ணாடி அழகு அன்று ; அல்லது மைதீட்டிக் கொள்வது அன்று; துன்பப்படும் மக்களிடம் இரக்கம் காட்டுவதே கண்ணுக்கு அழகு. மதியாதார் தலைவாசலை மிதிப்பதற்குச் செல்லாமைதான் காலுக்கு அழகு; இத்துணை என்று தவறாமல் கணக்கிட்டுக் கூறுதலே கணக்குக்கு அழகாகும்; கேட்பவர்கள் நன்று ! நன்று ! என்று சொல்லிச் சுவைக்கும்படி பாடுவதுதான் பாட்டுக்கு அழகு; அரசனுக்கு அழகு தனது நாட்டு மக்களைத் துன்புறுத்த மாட்டான் என்று சொல்லப்படுவதாகும்.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண் டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.

காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.
ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், சீந்தில் கொடி, வகைக்கு சிறிதளவு எடுத்து, 16 பங்கு நீர் சேர்த்து 8ல் 1 பங்கு ஆகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து தினமும் 2-3 முறை கொடுத்து வந்தால் இருமல், கோழைக்கட்டு, காய்ச்சல் தீரும்.
 

ஐய மறுந் தீபனமா மாம மலக்கட்டும்
பைய வெளியாகிவிடும் பார்மீதிற்- செய்ய மலர்த்
தொத்திருக்கும் வார் குழலே தூமணலா ருங்கண்டங்
கத்தரிக்கா யைப் புசிக் குங்கால் ’

வெண் மணலிலுண்டாகின்ற கண்டங்கத்திரிக்காயால் சிலேத்தும நோய் தீரும். சீதம் கலந்த மலமும் பசியும் உண்டாம்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.

இதன் வேரையும், கண்டங்கத்திரி வேரையும், குடிநீரிட்டு அதில் திப்பிலிப் பொடியை சேர்த்து கொடுத்தால் இருமல் நீங்கும்.

சாலை யோரத்தில் அழகிய வண்ணத்தில் பூ பூத்து ,சிறிய கத்திரிக்காய் போன்ற மூலிகை கண்டால் அதை கவனித்திப்பார்த்து ,பரிச்சிய படுத்திக்கொள்ளுங்கள் .

You may also like

Leave a Comment