பாரதியின் மரணச் சான்றிதழ்

 

பாரதியின் மரணச் சான்றிதழ்

திரு.ஹரிகிருஷ்ணன் (hari.harikrishnan@gmail.com)

 

 

ரா அ பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதியில் இந்தச் சான்றிதழ் இடம்பெற்றிருக்கிறது.  ஒருமுறை ஒப்புநோக்கவும்.

 

இந்தச் சான்றிதழ் 1921ல் வழங்கப்பட்டிருக்கிறது.  சான்றிதழ் வரிசை எண் 6 பார்க்கவும்.  Date of Registration அதாவது மரணம் பதிவான தினம் – செப்டம்பர் 21, 1921.  பாரதி மரணத்துககு 9 நாள் கழித்து பதிவு செய்திருக்கிறார்கள். 

பாரதி இறந்தது செப்டம்பர் 11 என்று சொல்கிறோம்.  அந்த நாளைத்தான் நினைவுநாளாக அனுசரிக்கிறோம்.  ஆனால், பாரதி இறந்த நேரம் இரவு சுமார் 1.30.  ஆகையினால், நம்முடைய நடைமுறை வழக்கப்படி அது இன்னமும் செப்டம்பர் 11ஆகவே கருதப்படுகிறது.  ஆனால் அலுவலக (ஆங்கிலேயே) முறைப்படி, இரவு 12 மணியைத் தாண்டினால் அது மறுதினமாக ஆகிறது.  எனவே, மரணச் சான்றிதழில் பாரதி இறந்த தினம் செப்டம்பர் 12 என்று குறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *