நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 8

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

7. வெள்ளரிக்கா தோட்டத்துல விளையாட்டு

சிறுமிகளால் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு. சிறுமிகளனைவரும்; வட்டமாக நின்றுகொண்டு ஒருவர் கைகளை மற்றவர் கோர்த்துக்கொண்டு ஒரு காலைத் தூக்கி ஆட்டி மற்றொரு காலினால்; குதித்து ஒவ்வொருவரும் ஆடிக்கொண்டே வட்டமாக சுற்றிக் கொண்டெ வந்து சுற்றும்போது அனைவரும் பாடுகின்றனர்.

வெள்ளரிக்கா தோட்டத்துல வெளயாடப் போறேன்
கத்தரிக்கா தோட்டத்துல களை எடுக்கப்போறேன்
பூசணிக்கா தோட்டத்துல பூப்பறிக்க போறேன்

என்று பாடுகின்றனர். பாடிமுடித்ததும் கடைசியில் கையைவிட்டு விட்டு அவரவர் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து தன்னிடத்திலிருந்து முன்னால் குதித்து

“ஈச்சனக்கடி ஈலசா ஈச்சனக்கடி ஈலசா”

என்று சொல்லிக்கொண்டு முன்னும் பின்னுமாக வேகமாகக் குதிக்கின்றனர். அவ்வாறு தொடர்ந்து கீழே விழாமல் குதிப்பவரே தைரியமானதும் உடல் வலிமையுடையவராகவும் கருதப்படுகிறார்.
சேகரித்த இடம் – வலையப்பட்டி-14.9.96

 

[பகுதி 9 க்குச் செல்க]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *