Home sculpture கம்பத்து இளையனார் கோவில் சிற்பங்கள்

கம்பத்து இளையனார் கோவில் சிற்பங்கள்

by Dr.K.Subashini
0 comment

படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி

படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011

 

கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம்

 

கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின் சுவர்களிலும் தூண்களிலும் மிக நுணுக்கமான வித்தியாசமான கற்சிற்பங்களைக் காணலாம்.

இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் உப்பு கொட்டி வைத்திருப்பதைக் காணலாம்.  முகத்தில் மரு உண்டாகும் போது பக்தர்கள் இம்மரு நீங்க வேண்டும் எனப் ப்ரார்த்தனை செய்து கொண்டு இங்கே சுப்ரமணிய சாமி கோயிலில் உப்பு போடுவது ஐதீகமாக இருக்கின்றது. தங்களின் வேண்டு்தலுக்கு இறைவன் அருள் பாலித்து உப்பு உதிர்வது போல மரு உதிர்வதாக மக்கள் நம்பிக்கை அமைந்திருக்கின்றது.

இங்கே சில படங்கள்..!

வேண்டுதலுக்காக கொண்டு வந்து போடும் உப்பு.

(இந்த வழக்கம் எந்த காலத்தில் தோன்றியிருக்கும் என்பது தெரியவில்லை. இது சமீக காலத்து வழக்கமாக இருக்கலாம் எனவே எண்ணத் தோன்றுகின்றது)

மயில் வாகனம்

விஷ்ணு சக்கரம் பார்வதி தேவியின் முகத்திலிருந்து உதிப்பது போல அமைக்கப்பட்ட ஒரு வடிவம். மிக அரிதான ஒரு கலைச் சிற்பம்.

புல்லாங்குழல் ஊதும் கண்ணன்

யசோதாவும் கண்ணனும். அம்மா அடிக்க வரும் போது காதுகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்பது போல அமைக்கப்பட்ட வடிவம்.

 

விஷ்ணுவை கருடன் சுமந்து செல்வது போன்ற ஒரு சிற்பம். இதே வடிவம் இக்கோயிலின் வேறு பல இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

 

ஹனுமார்

லக்‌ஷ்மி நரசிம்மன்

ஹனுமார் (ஆனந்த நடனம் ஆடும் ஹனுமார்)

You may also like

Leave a Comment